Blue Sattai Maran: "மிஷ்கினின் பிற்போக்குத்தனம்..” வெற்றிமாறன், GV பிரகாஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன் !!

சென்னை: த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசியது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் மன்சூர் அலிகான் த்ரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டு அறிக்கை விட்டுள்ளார்.

Blue Sattai Maran: Blue Sattai Maran condemns Mysskin speech at the Selfie audio launch

இந்நிலையில், ஜிவி பிரகாஷ் நடித்த செல்ஃபி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மிஷ்கின் பேசியதை ப்ளூ சட்டை மாறன் தனது டிவிட்டர் ஷேர் செய்துள்ளார்.

மேலும், மிஷ்கினின் அருவருக்கத்தக்க பேச்சைக் கேட்டு ஜிவி பிரகாஷ், வெற்றிமாறன் சிரித்துக்கொண்டிருந்தது குறித்து ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெற்றிமாறன், GV பிரகாஷை விளாசிய ப்ளூ சட்டை மாறன்
கடந்த சில தினங்களாக மன்சூர் அலிகான் விவகாரம் கோலிவுட்டையே பரபரப்பாக்கியது. லியோ படத்தில் த்ரிஷாவை ரேப் செய்யும் பெட்ரூம் சீன் இருக்கும் என நினைத்தேன். அது இல்லாமல் போனது ஏமாற்றமாக இருந்தது என பேசியிருந்தார். மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சுக்கு த்ரிஷா உடனடியாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதேபோல், லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, குஷ்பூ, மாளவிகா மோகனன் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இன்னொருபக்கம் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனையடுத்து முதலில் தனது தவறை ஒப்புக்கொள்ள மறுத்த மன்சூர் அலிகான், தற்போது த்ரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டார்.

இதனிடையே தமன்னா குறித்து ரஜினியும், கீர்த்தி சுரேஷ் பற்றி சிரஞ்சீவி பேசியதையும் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து கேள்வி எழுப்பி வந்தனர். அதேபோல் சீனு ராமசாமி - நடிகை மனீஷா யாதவ் பிரச்சினையும் வெளியே வந்தது. இந்நிலையில் செல்ஃபி படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மிஷ்கின் பிற்போக்குத்தனமாக பேசியதை ப்ளூ சட்டை மாறன் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், அப்போது ஜிவி பிரகாஷ், வெற்றிமாறன் சிரித்துக்கொண்டிருந்ததையும் அவர் விளாசியுள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், “ஜி.வி. பிரகாஷ், கௌதம் வாசுதேவன் நடித்த செல்ஃபி படத்தின் ப்ரெஸ் மீட்டில் மிஷ்கின் பேசியதுதான் இந்த வீடியோ. இந்த அநாகரீக பேச்சிற்கு ஜி.வி.பிரகாஷ் சிரித்து மகிழ்கிறார். வெற்றிமாறனாவது கண்டிப்பார் என பார்த்தால் அவரும் சிரித்தபடி அமர்ந்திருந்தது கொடுமை. விலங்குகளில் கேவலமானது எருமை மாடு, நிறங்களில் மட்டமானது கருப்பு எனும் இழிவான எண்ணத்துடன் எருமை பற்றி இப்படி பேசியிருப்பது உலக சினிமா மாமேதை, புத்தகப்புலியான மிஷ்கினுடைய பிற்போக்குத்தனத்தின் உச்சம்.”

“ரேப் எனும் வார்த்தையை நாகரீக உலகில் யாரும் பயன்படுத்துவதில்லை. Sexual Assault உள்ளிட்ட வேறு வார்த்தை பிரயோகங்கள் பொதுத்தளத்தில் எப்போதே வந்துவிட்டது பற்றிக்கூட தெரியாமல் இருக்கிறார். ஏழெட்டு எருமைகளை ரேப் செய்யும் காட்சியை வைப்பேன் என்று சொல்வதை விட மகா மட்டமான சொற்கள் உண்டா இதையெல்லாம் தட்டிக் கேட்காத திரையுலக மேதாவிகள், மகளிர் அமைப்பு மாந்தர்கள் மன்சூரை மட்டும் குதறிக்கொண்டு இருப்பது ஏன்?”

“இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. இப்படி மிஷ்கின் பேசியது பற்றி இன்றாவது வெற்றிமாறனும், மன்சூருக்கு எதிராக கொந்தளித்த திரையுலகத்தினர், சமூக ஆர்வக் கோளாறுகளும் கண்டனம் தெரிவிப்பார்களா அல்லது பம்மிக்கொண்டு இருப்பார்களா.? எளிய மக்களுக்காக அவ்வப்போது குரல் தரும் ஜி.வி.பிரகாஷ், உங்களுக்கு இந்தப் பேச்சு எப்படி சிரிப்பை வரவழைத்தது?”

“பல மேடைகளில் கெட்ட வார்த்தைகள் பேசும் மிஷ்கினை விட்டுவிட்டு ஒரு வாரமாக மன்சூருக்கு மட்டும் அதீத முக்கியத்துவம் தருவது ஏன்? பிரபல இயக்குநருக்கும் வில்லன் நடிகருக்கும் தனித்தனி அளவுகோல் வைத்துள்ளீர்களா? அல்லது மன்சூரின் மதம்தான் உங்களுக்கு பெரிய பிரச்னையாக படுகிறதா?” என விளாசியுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்வீட்டர் பதிவுக்கு நெட்டிசன்களும் சப்போர்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X