Trisha - த்ரிஷா விவகாரம்.. தமிழ் நடிகர்கள் வாயிலிருந்து கொழுக்கட்டையை எடுக்கவில்லை.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்
சென்னை: Mansoor Ali Khan Trisha Controversy (த்ரிஷா - மன்சூர் அலிகான் சர்ச்சை): த்ரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசிய விவகாரத்தில் தமிழ் நடிகர்கள் வாயிலிருந்து கொழுக்கட்டையை எடுக்கவில்லை என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் லியோ. பெரும் எதிர்பார்ப்போடு கடந்த மாதம் வெளியான இத்திரைப்படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தியது. ஆனால் பொதுவான ரசிகர்களை பெரும்பாலும் கவரவில்லை. அதேசமயம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

மன்சூரின் ஆபாச பேச்சு: இந்த சூழலில், லியோவில் த்ரிஷாவுடன் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் கண்டிப்பாக அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும்; ரேப் சீன் இருக்கும் என்று பார்த்தேன் அதுவும் இல்லை; குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் அவரையும் தூக்கி போடலாம் என்று நினைத்தேன்.150 படங்களில் சினிமாவில் நான் பண்ணாத அட்டூழியமா. ஆனால் காஷ்மீரில் த்ரிஷாவை எனது கண்ணிலேயே காட்டவில்லை என மன்சூர் அலிகான் பேசியிருந்தார்.
எதிர்ப்பு: மன்சூர் அலிகானின் இந்த கீழ்த்தரமான பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. த்ரிஷாவுன் தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். அவர் தவிர்த்து திரையுலகில் இருக்கும் மற்றவர்களும் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். குறிப்பாக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் நடிகர்கள் மௌனம்: ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக கருதப்படும் யாரும் இதுவரை வாயே திறக்கவில்லை. அவர்கள் அனைவருடனும் த்ரிஷா ஜோடியாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோலிவுட் ஹீரோக்களின் இந்த மௌனம் கடும் கண்டனத்துக்குரியது என்று தொடர்ந்து ரசிகர்களும், திரை ஆர்வலர்களும் தெரிவித்துவருகிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் சிரஞ்சீவியின் ட்வீட்டை ரீ ட்வீட் செய்திருக்கும் ப்ளூ சட்டை மாறன், “த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் தவறாக பேசியதற்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம். தமிழ் நடிகர்கள்.. தீபாவளி கொழுக்கட்டையை வாயில் இருந்து இன்னும் எடுக்கவில்லை. படங்களில் மட்டும் பெண்களை காப்பாற்றும் அட்டைகத்திகள் இவர்கள். கேட்டால் நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துவிட்டது என சாக்கு சொல்வார்கள்.
நீங்கள் தனியே கண்டனம் தெரிவித்தால் என்னவாகி விடும்? உங்களுடன் நடித்த கதாநாயகிக்கே குரல்தர வக்கற்ற உங்களுக்கு எதற்கு அரசியல் ஆசை? எதற்கு சினிமா மேடைகளிலும், பேட்டிகளிலும், படங்களிலும்..உத்தமன் வேடம்” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











