மாபெரும் துயரம்.. ஆன்டி இந்தியன் படத்தில் செம ரோல்.. மாறன் மறைவுக்கு ப்ளூ சட்டை மாறன் இரங்கல்

சென்னை: நடிகர் மாறன் மறைவுக்கு விமர்சகரும் இயக்குநருமான ப்ளூசட்டை மாறன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கில்லி, கேஜிஎஃப், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் மாறன் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 48.

நடிகர் மாறனின் மறைவு ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர் மாறன் மரணம்

நடிகர் மாறன் மரணம்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சையில் ஈடுபட்டு வந்த நடிகர் மாறன். நேற்று இரவு கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது வெறும் 48 மட்டும் தான். தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்பிரபலங்களும் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர்.

ஆதிவாசி அடக்கி வாசி

ஆதிவாசி அடக்கி வாசி

தளபதி விஜய் நடித்த கில்லி படத்தில் ஆதிவாசியாக நடித்து பிரபலமானவர் நடிகர் மாறன். ஆதிவாசி அடக்கி வாசி என விஜய் பேசும் வசனம் மிகவும் பிரபலமான வசனத்துக்கு இவரது கதாபாத்திரம் தான் காரணமாக அமைந்தது. வேட்டைக்காரன் படத்திலும் நடிகர் விஜய்யின் நண்பராக திருமண மண்டபத்தில் அட்டகாசம் செய்வார்.

சோகத்தில் சார்பட்டா படக்குழு

சோகத்தில் சார்பட்டா படக்குழு

கேஜிஎஃப் படத்தில் நடித்திருந்த நிலையில், பா. ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படத்தில் மாஞ்சா கண்ணன் எனும் முக்கிய கதாபாத்திரத்திலும் இவர் நடித்துள்ளார். இவரது மரண செய்தியை அறிந்த நடிகர் ஆர்யா, இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட படக்குழுவினர் மிகவும் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மகள் அழுகிறாள்

மகள் அழுகிறாள்

இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்த இரங்கல் பதிவில், கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர் மாறன் உயிரிழந்த நிலையில், அவரது முகத்தை கூட கடைசியாக காட்டவில்லை என அவரது மகள் அழுகிறாள் என்றும் அவரை தேற்ற தன்னிடம் வார்த்தைகள் இல்லை அண்ணா என்றும் ரஞ்சித் உருகி இருந்தார்.

ப்ளூ சட்டை மாறன் இரங்கல்

ப்ளூ சட்டை மாறன் இரங்கல்

"மாபெரும் துயரம்.... அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..." என பிரபல விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இந்தியன் படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிசியாக வேண்டியவர்

பிசியாக வேண்டியவர்

ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இந்தியன் படத்தில் இவருக்கு செம ரோல். படம் வரும்போது இவரும் பிசியாகிவிடுவார் என்று கணித்த நிலையில் இப்படியொரு துயரம் என சமூக வலைதளத்தில் உருக்கமான இரங்கல்களும் பதிவிடப்பட்டு வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X