Blue Sattai: “கசமுசா சர்ச்சை சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே” திடீரென எதிர்ப்பு தெரிவித்த ப்ளூ சட்டை
சென்னை: 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே படத்தை திரையிட ப்ளூ சட்டை மாறன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் எதிர்ப்பு: 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் பல மொழிகளைச் சேர்ந்த ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அதேபோல் தமிழில் மாமன்னன், அயோத்தி, அநீதி, போர் தொழில், செம்பி, உடன்பால், விடுதலை 1, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.

இதில் சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே படத்தை திரையிட ப்ளூ சட்டை மாறன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், "Chennai International Film Festival 2023 begins today: Spark - 1" என்ற டைட்டிலில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அதாவது, "சமீபத்தில் கசமுசா சர்ச்சை மூலம் பிரபலமான இயக்குநர் சீனு ராமசாமியின் 'கண்ணே கலைமானே' படம் 18 ஆம் தேதி மாலை 7.15 மணிக்கு திரையிடப்படுகிறது."
"இப்படியான தவறுகளை இனி CIFF அமைப்பினர் தவிர்த்தல் நலம். எந்த தவறு செய்தாலும் நாம் அல்லது நமது படைப்புகள் உலக சினிமா மேடையில் ஏற்றப்படுவதால் அந்த கறை நீங்கிவிடும் எனும் தைரியத்தை அந்த நபர்களுக்கு தந்துவிடும். தற்போது நடந்து வரும் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் போரினால் பாதிக்கப்படும் தேசங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர், அம்மாநில முதலமைச்சரின் ஆதரவுடன்."
"மேலும் திரைப்பட நாயகி ஒருவருக்கு முன்னணி நடிகர் ஒருவரால் ஏற்பட்ட கொடுமையை கேரள திரையுலகும், அச்சமூகமும் தட்டிக்கேட்டது. ஆனால் இங்கே நிலைமை தலைகீழாய் இருப்பது துரதிர்ஷ்டம். சர்வதேச திரைப்பட விழா என்பது பல்வேறு நாட்டுப் படங்களை திரையிடும் கலை நிகழ்வாக மட்டுமின்றி, சமூக மேம்பாட்டிற்கும், பெண்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு குரல் தரும் மையமாகவும் அமைவதுதான் சிறப்பு."

"கண்ணே கலைமானே திரைப்படம் சுற்றுச்சூழல் நலனை வற்புறுத்தும் போட்டியற்ற பிரிவில் வெளியாகிறதாம். இதே பிரிவில் பல்வேறு சிறிய பட்ஜெட் தமிழ்ப்படங்கள் சுற்றுச்சூழல் நலன் பற்றி பேசியுள்ளன. அவற்றை திரையிட்டு இருக்கலாம். மாமன்னன் திரையிடல்.. சரியான தேர்வு. ஆனால் உதயநிதியை குளிர்விப்பதும் 'கண்ணே கலைமானே' திரையிடலின் ஒரு காரணமாக இருப்பின்... அது சரியா என்பதை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்" என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
த்ரிஷா - மன்சூர் அலிகான் சர்ச்சையின் போது சீனு ராமசாமி மீதும் மீ டூ புகார் எழுந்தது. இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்த போது சீனுராமசாமி நடிகை மனிஷா யாதவ்க்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அப்போது முதலே சீனுராமசாமியை வெளுத்து வாங்கி வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications











