நீ தான் தைரியமான ஆளாச்சே.. என்ன செய்யப்போற.. கெளதம் மேனனை விடாமல் வச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: வெந்து தணிந்தது காடு படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனம் கொடுத்த நிலையில், அவர் பேசுறதையெல்லாம் பார்க்கும் போது இறங்கி செய்யலாம்னு தோணுது என கெளதம் மேனன் பேசியிருந்தது பரபரப்பை கிளப்பியது.

அந்த டிவி பேட்டியை பார்த்ததில் இருந்து ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் கெளதம் மேனனை விடாமல் வச்சு செய்து வருகிறார்.

நீ தான் தைரியமான ஆளாச்சே.. என்ன செய்யப் போறேன்னு ஓப்பனா சொல்லு என காலையிலேயே மீண்டும் ஏழரையை கூட்டி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

பார்த்திபன் டிஸ்சார்ஜ்

பார்த்திபன் டிஸ்சார்ஜ்

இரவின் நிழல் படத்தை தொடர்ந்து விமர்சித்து பார்த்திபன் உடன் சண்டை போட்டு வந்தார் ப்ளூ சட்டை மாறன். டென்ஷனான பார்த்திபன் ப்ளூ சட்டை மாறனுக்கு ரியாக்ட் செய்ய அதற்காகவே தனது விமர்சன வீடியோக்களில் பார்த்திபனை பற்றி சில நிமிடங்கள் பேசத் தொடங்கினார். இந்நிலையில், பழைய பேஷன்ட் பார்த்திபனை டிஸ்சார்ஜ் செய்து விட்டு புதிய பேஷன்ட் கெளதம் மேனனை அட்மிட் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

கோபத்தில் கொந்தளித்த கெளதம் மேனன்

கோபத்தில் கொந்தளித்த கெளதம் மேனன்

ஒரு கட்டத்தில் பார்த்திபன் கண்டுக்கொள்ளாமல் விட்ட நிலையில், ப்ளூ சட்டை மாறன் வேறு வழியின்றி அமைதியானார். பார்த்திபனை போலவே கெளதம் மேனனும் கோபத்தில் கொந்தளித்து அவரை இறங்கி செய்யலாம்னு தோணுது என பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், இறங்கி செய்யுறதுனா என்னன்னு ஒரே லிஸ்ட்டே போட்டு கெளதம் மேனன் உடன் நேரடி மோதலில் இறங்கி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

பெயர் வைத்து பிரச்சனை

பெயர் வைத்து பிரச்சனை

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் பெயரில் உள்ள மேனன் அவரது சாதிப் பெயர் அதனை ஏன் வைத்துள்ளார் என்கிற கேள்வியை எழுப்பி தமிழ் சினிமாவிலேயே சாதிய அடையாளத்தை பெருமையாக வைத்துக் கொள்ளும் ஒரே இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தான் என்றும் மின்னலே உள்ளிட்ட ஆரம்ப கால படங்களில் கெளதம் என்று மட்டுமே பெயர் போட்டு உள்ளார் என மேலும், சில ட்வீட்களையும் போட்டு பிரச்சனையை பெரிதாக்கி உள்ளார்.

நீ தான் தைரியமான ஆளாச்சே

நீ தான் தைரியமான ஆளாச்சே

'இறங்கி செய்ய போறேன்னு ஈயம் பூசி பேட்டி குடுத்தா போதுமா? என்ன செய்யப்போறேன்னு ஓப்பனா சொல்லு. நீதான் தைரியமான ஆளாச்சே. பயப்படாத. இன்னைக்கே ஆக்சன்ல இறங்கு' என வடிவேலுவின் சூணா பாணா மீம் போட்டு விடாமல் வச்சு செய்து வருகிறார்.

ரசிகர்கள் ஜாலி

ரசிகர்கள் ஜாலி

ப்ளூ சட்டை மாறன் இயக்குநர் கெளதம் மேனனுக்கு எதிராக தொடர்ந்து ட்வீட்களை போட ஆரம்பித்ததும் ரசிகர்கள் படு குஷியாக வந்து அவரது கமெண்ட் பக்கத்தில் கண்டபடி திட்டியும் ட்ரோல் மீம்களையும் போட்டு விட்டு செல்கின்றனர். இயக்குநர் கெளதம் மேனன் கண்டு கொள்ளாமல் அமைதியாக விட்டாலே இவர் ஆஃப் ஆகிவிடுவார் என்றும் அட்வைஸ்களும் பறக்கின்றன.

ப்ளூ சட்டை மாறனுக்கு எச்சரிக்கை

ப்ளூ சட்டை மாறனுக்கு எச்சரிக்கை

கெளதம் மேனன் சாதாரண ஆள் கிடையாது. அவர் உண்மையாவே இறங்கி செஞ்சிடப் போறாரு, கொஞ்சம் அமைதியா இருங்க ப்ளூ சட்டை என நெட்டிசன்கள் ப்ளூ சட்டை மாறனுக்கும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ப்ளூ சட்டை மாறனுக்கு கெளதம் மேனன் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதை காணவும் ரசிகர்கள் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X