கொஞ்சமாவது நடிங்க.. வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட விஜய் ஆண்டனி.. வச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: ரோமியோ படத்தை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால், கடுப்பான விஜய் ஆண்டனி பல நல்ல படங்களை தவறாக விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன் போன்ற அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று கூறியிருந்தார். இதனால், கடுப்பான ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரே அலறும் அளவிற்கு விஜய் ஆண்டனியை வச்சு செய்து வருகிறார்.
நடிகர் விஜய் ஆண்டனி இதுவரை நடித்திராத ரொமாண்டிக் காமெடி ஜனரில் நடித்துள்ள திரைப்படம் தான் ரோமியோ. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில், விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா என பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

சர்ச்சை பேச்சு: படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரோமியோ படத்தின் போஸ்டரில் முதலிரவில் கணவனும் மனைவியும் சேர்ந்து மது குடிப்பது மாதிரியான போஸில் விஜய் ஆண்டனியும் ஹீரோயினும் அமர்ந்து இருந்தனர். இந்த போஸ்டர் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு விளக்கம் அளித்த விஜய் ஆண்டனி வாயை கொடுத்து மாட்டிக்கொண்டார்.
ரோமியோ படத்தை பாருங்க: அதே போல, ரோமியோ படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை கண்டித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருந்தார். இதில், நல்ல படங்களை தவறாக விமர்சித்து சொல்லும் ப்ளூ சட்டை மாறன் போன்ற சிலர் பேச்சை நம்பி ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல் இருக்காதீர்கள். ரோமியோ படத்தை பாருங்க நல்ல படம், அன்பே சிவம் படத்தைப் போல இதை ஆக்கிவிடாதீர்கள் என குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைக்கு திருந்திய ப்ளூ சட்டை: விஜய் ஆண்டனியின் இந்த பதிவை பார்த்த ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ட்வீட் செய்து இணையத்தையே அலறவிட்டு வருகிறார். முதலில், சினிமா ரசிகர்களே.. தரம் தாழ்ந்த விமர்சகரும், விமர்சன விஷக்கிருமியுமான ப்ளூ சட்டையின் ரோமியோ ரிவியூவை புறக்கணிப்பீர். அலைகடலென திரண்டு ரோமியோ ஓடும் தியேட்டர்களை நிரப்புங்கள். இப்படிக்கு, தற்போதைக்கு திருந்திய.. ப்ளூ சட்டை என பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
பாவம் விஜய் ஆண்டனி: அதோடு விடாமல், சமீபத்தில் வந்த ரத்தம், கொலை மட்டுமல்ல. பல ஃப்ளாப்களை தந்தவர். எப்படியாவது இந்த படத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம். ஆகவே.. முதலிரவில் மனைவி சரக்கடிக்கும் போஸ்டரை வைத்து வித்யாசமான பப்ளிசிட்டி செய்தார். ஆனாலும் மக்கள் கண்டுகொள்ளவில்லை. இப்போது விமர்சகர்களை பிராண்டி வருகிறார். மொதல்ல கொஞ்சமாவது நடிக்க கத்துக்கங்க, இயக்குனர், எடிட்டர் வேலைல தலையிட்டு படத்தை காலி பண்ணாதீங்க. உங்க படம் நல்ல படம்னு மக்கள் சொல்லனும். அப்பறம்... தப்பு தப்பா ப்ரமோசன் ஐடியா தர்ற அல்லக்கைகளை விரட்டி விடுங்க. உங்கள மாதிரி அப்பாவிகளை அவங்க அழகா மொட்டை அடிச்சிருவாங்க, மண்ட பத்தரம் என பதிவிட்டு, விஜய் ஆண்டனியை பங்கமாக விமர்சித்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பாவம் விஜய் ஆண்டனி தெரியாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொண்டார் என இணையத்தில் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.





Click it and Unblock the Notifications











