சைக்கிள் டிரைவர் வேலைக்கு வரலயா? விஜய்யை பங்கமாக கிண்டலடித்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: ரஜினிகாந்த், அஜித், சிவகார்த்திகேயன், ராதிகா, சரத்குமார், தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் காலையிலேயே ஆர்வமாக தங்களது வாக்குகளை பதிவு செய்துவிட்ட நிலையில், நடிகர் விஜய் தாமதமாக வந்ததால், ப்ளூ சட்டை மாறன் அவரை பங்கமாக கிண்டலடித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ந் தேதியான இன்று தொடங்கி, ஜூன் மாதம் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. அதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. எப்பொழுதுமே முதல் ஆளாக வந்து வாக்களிப்பதை அஜித் குமார் வழக்கமாக வைத்திருக்கிறார். மனைவி ஷாலினியுடன் வராமல் தனியாக வந்து வாக்களித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை செலுத்தினார். வாக்குரிமை இருக்கும் அனைவருமே கட்டாயம் வந்து வாக்கு செலுத்த வேண்டும். வாக்கு செலுத்துவது மரியாதை, கௌரவம் இருக்கிறது. தயவு செஞ்சி அனைவரும் வாக்களித்து விடுங்கள் என்றார். இதையடுத்து, நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், ராதிகா, சரத்குமார், பிரபு, கௌதம் கார்த்திக் ஆகியோர் வாக்களித்தனர். குஷ்பு தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.
சைக்கிளில் வந்து வாக்களித்தார்: அனைத்து திரைத்துறை பிரபலங்களும் விறுவிறுப்பாக வாக்களித்து வரும் நிலையில், The Greatest of All Time படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் இருந்த விஜய் வருவாரா வரமாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அவரின் வருகைக்காக காத்திருந்தனர். கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் வருகைக்காக அனைவரும் காத்திருந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள வாக்குசவாடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்துவிட்டு காரில் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.

சைக்கிள் டிரைவர் வேலைக்கு வரல: விஜய் தற்போது வாக்களிக்க எதில் வருவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய்யை கிண்டலடிக்கும் வகையில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், விஜய்யின் சைக்கிள் டிரைவர் வேலைக்கு வர தாமதம் என தகவல். எப்போது வாக்களிக்க வருவார் தளபதி என ரசிகர்கள் காத்திருப்பு என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தினார். தமிழக வெற்றிக்கழக தலைவரான பின் விஜய் தனது முதல் வாக்கை செலுத்தினார்.
The Greatest of All Time: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All Time' படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 68வது படமாகும். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். கோட் திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகி வருவதாகவும், அதில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சமீபத்தில் படம் வரும் செப்டம்பர் 5ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











