Yogi babu: யோகிபாபு விவகாரம்.. பெரியார் வார்த்தைகளுடன் கண்டனத்தை பதிவு செய்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் யோகிபாபு அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். ஹீரோவாகவும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக வெளியாகவுள்ள ரஜினியின் ஜெயிலர் படத்திலும் யோகிபாபு நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது.

பாலிவுட்டிலும் ஷாருக்கானின் ஜவான் படத்திலும் நடித்துள்ளார் யோகிபாபு. இவருக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளது.

Blue sattai Maran criticise about Siruvapuri temple incident of Yogi babu

யோகிபாபு அவமானப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: நடிகர் யோகிபாபு, அடுத்தடுத்த படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் இவர் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து ஷாருக்கானின் ஜவான் படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீசாகவுள்ளது. தொடர்ந்து ஏராளமான படங்களில் காமெடியனாகவும் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.

வடிவேலு, சந்தானம் போன்ற காமெடி நடிகர்கள், காமெடியனாக தொடர முடியாத நிலையில், யோகிபாபு, அந்த இடத்தில் சிறப்பாக பொருந்தினார். தன்னுடைய டைமிங் காமெடி மற்றும் பாடி லேங்குவேஜால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த யோகிபாபு, நிற்கக்கூட நேரமில்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். யோகிபாபுவின் கால்ஷீட்டிற்காக முன்னணி ஹீரோக்களும் காத்திருக்கும் நிலை கோலிவுட்டில் காணப்படுகிறது.

சமீபத்தில் எல்ஜிஎம் படத்தில் யோகிபாபுவின் கால்ஷீட்டிற்காக தான் அதிகமாக மெனக்கெட்டதாக படத்தின் பிரமோஷனின்போது படத்தின் தயாரிப்பாளர் தோனி கூறியிருந்தார். ஆன்மீகத்திலும் அதிக நாட்டத்துடன் காணப்படுகிறார் யோகிபாபு. தன்னுடைய சமூக வலைதளப்பக்கங்களில் அடுத்தடுத்து ஆன்மீகம் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். குறிப்பாக இவரது பக்கத்தில் அதிகமான முருகர் படங்களை பார்க்க முடியும்.

அடிக்கடி, பல கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார் யோகிபாபு. அந்த வகையில் தற்போது சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார் யோகிபாபு. அந்தக் கோயிலில் அவர் தீண்டாமையை எதிர்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வின்போது, கோயிலின் அர்ச்சகர் ஒருவருக்கு கைக்கொடுக்க முயன்ற யோகிபாபுவிற்கு, அவர் பதிலுக்கு கைக்கொடுக்காத சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. பிரபல நடிகருக்கே இந்த நிலைமையா என்று பல தரப்பினரும் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அவர் தனது பதிவில் யோகிபாபுவின் இந்த வீடியோவை பகிர்ந்து, சாமி கும்பிடுறேன் என்பதற்கு எதிரானது அல்ல பகுத்தறிவு, கும்பிடுறேன் சாமி என்பதற்கு எதிரானதே பகுத்தறிவு என்ற பெரியாரின் வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X