தேசிய விருது.. புஷ்பாவை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்.. சூப்பர்ஸ்டாரை தொடர்ந்து ஸ்டைலிஷ் ஸ்டாரையுமா?
சென்னை: புஷ்பா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்முறையாக தேசிய விருது வென்ற சந்தோஷத்தை தனது படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.
இந்நிலையில், அல்லு அர்ஜுனுக்கு போய் எப்படி தேசிய விருது கொடுக்கலாம், அவர் என்ன அப்படி நடித்து விட்டார் என ட்ரோல் செய்யும் விதமாக ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு தமிழ் சினிமா நடிகர்களையும், ப்ளூ சட்டை மாறனையும் கமெண்ட் பக்கத்தில் விளாசி வருகின்றனர்.
அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது: பாலிவுட் முதல் கோலிவுட் வரை 2011ம் ஆண்டு பல நல்ல படங்களில் நடித்து பல நடிகர்கள் போட்டிப் போட்ட நிலையில், அனைவரையும் வீழ்த்தி விட்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அல்லு அர்ஜுன் புஷ்பா படத்திற்காக பெற்றுள்ளார்.
ஜெய்பீம் படத்தில் நடித்த மணிகண்டன், கர்ணன் படத்தில் நடித்த தனுஷ், சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த ஆர்யா உள்ளிட்ட தமிழ் சினிமா நடிகர்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என கோலிவுட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.
இதயமே இல்லியா: தெலுங்கு திரையுலகிலேயே இதுவரை எந்தவொரு நடிகரும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறாத நிலையில், முதல்முறையாக அல்லு அர்ஜுன் புஷ்பா படத்திற்காக தேசிய விருது வென்றதை டோலிவுட் திரையுலகமே கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், "ஐயா உங்களுக்கு இதயமே இல்லீயா" என ப்ளூ சட்டை மாறன் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கியதை ட்ரோல் செய்து அல்லு அர்ஜுன் ரசிகர்களை காண்டாக்கி உள்ளார்.

அஜித்துக்கு சப்போர்ட்: அல்லு அர்ஜுனை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்த நிலையில், பின்ன வலிமை அஜித்துக்கா கொடுப்பாங்க என அல்லு அர்ஜுன் ஆர்மி ட்ரோல் செய்ய, அஜித்துக்கு சப்போர்ட்டாக, "நீ வாலி, முகவரி எல்லாம் பார்த்தது இல்லையா என ப்ளூ சட்டை மாறன் கமெண்ட் போட்டுள்ளார்.
அல்லு அர்ஜுன் சிறந்த நடிகர் இல்லை என எப்படி சொல்லலாம் என அல்லு அர்ஜுன் ஆர்மி ப்ளூ சட்டை மாறனை துவைத்து எடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











