குபேரா தனுஷை வீழ்த்த நயன்தாரா சதியா?.. நீங்கள்தான் சதி செய்கிறீர்கள்.. விளாசிய ப்ளூ சட்டை மாறன்
சென்னை: தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் நேற்று வெளியாகி ஓரளவுக்கு பாசிட்டிவ் விமரசனத்தையே பெற்றிருக்கிறது. வசூலிலும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது படம். இதற்கிடையே அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கொஞ்சம் காட்டமாகவே பேசியிருந்தார் தனுஷ். அதனைப் பார்த்த ரசிகர்கள் நயன்தாராவைத்தான் மறைமுகமாக சாடியிருக்கிறார் என்று கூறினார்கள். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் ட்வீட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் நேற்று எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. தனுஷுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படத்துக்கு ரசிகர்கள் பாசிட்டிவ் ரிவ்யூவை கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக தனுஷின் நடிப்பை பார்த்து கொண்டாடிவரும் அவர்கள்; கண்டிப்பாக தேசிய விருது உறுதி என்ற இப்போதே ஆரூடம் கூற ஆரம்பித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
டீசன்ட் ப்ளூ சட்டை மாறன்: பெரும்பாலான படங்களை கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறன்கூட இந்தப் படத்தின் விமர்சனத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார். அதனைப் பார்த்து பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள். விமர்சன ரீதியாக இப்படி நல்ல பாதையில் போய்க்கொண்டிருக்கும் படமானது; வசூலிலும் டீசன்ட் நம்பர்ஸை பெற்றிருக்கிறது. முதல் நாளான நேற்று 13 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

குபேரா ஆடியோ வெளியீட்டு விழா: இதற்கிடையே குபேரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், தனக்கு எதிராக வதந்தி பரப்புபவர்கள், நெகட்டிவிட்டி பரப்புபவர்களால் ஒரு செங்கல்லைக்கூட ஆட்ட முடியாது என காட்டமாக பேசியிருந்தார். அவரது பேச்சை பார்த்த ரசிகர்கள், நயன்தாரா, சுசித்ரா உள்ளிட்டோரைத்தான் மறைமுகமாக தாக்கியிருக்கிறார் என்று கணிக்க ஆரம்பித்தார்கள். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் போட்டிருக்கும் ட்வீட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
ப்ளூ சட்டை ட்வீட்: அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "உலகை உலுக்கி வரும் திட்டமிட்ட சதிகள்: உக்ரைனுக்கு எதிராக ஷ்யா சதி. ஈரானை தகர்க்க இஸ்ரேல் சதி. தனுஷை வீழ்த்த மூக்குத்தி அம்மணி சதி. திடீர் தளபதியை பொளக்க சுள்ளான் சதி. சுள்ளானை சுருட்டி வீச லிட்டில் சூப்பர் ஸ்டார் சதி. சூர்யாவை பொசுக்க பலதரப்பு சதி. கமலை நசுக்க தலீவர் ஃபேன்ஸ் சதி மொக்கை படங்களை எடுத்து.. இவங்களுக்கு எதிரா இவங்களே சதி செஞ்சிக்க வேண்டியது.
பழியை போடாதீர்கள்: பழியை தூக்கி ஊர்ல இருக்கறவன் மேல போட வேண்டியது. தொடர்ந்து காட்டு மொக்கை படங்களை தந்து... படம் பாக்க வர்றவங்களுக்கு எதிரா நீங்கதான் திட்டமிட்டு சதி செஞ்சிட்டு வர்றீங்க. உருப்படியா படம் எடுக்கறதை விட்டுட்டு.. திட்டமிட்ட சதி, வட்டமிட்ட விதின்னு உருட்டிட்டு திரியாதீங்க. ஆதாரம் இருந்தா கோர்ட்ல வழக்கு போடுங்க. டப்பா படத்தை எடுத்துட்டு.. இப்படி சென்டிமென்ட் பிட் எல்லாம் போட்டா மக்கள் ஏமாறவே மாட்டாங்க. தொடரந்து தோத்துக்கிட்டுதான் இருப்பீங்க. Stop your cringe sympathy seeking speeches" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக நயன்தாராவுக்கும் தனுஷுக்கும் இடையே ஆவண பட விவகாரத்தில் மோதல் உருவானது. அந்த சமயத்தில் தனுஷுக்கு எதிராக நீண்ட அறிக்கையை நயன் வெளியிட்டிருந்தார். மேலும் அந்த விஷயம் தொடர்பாக தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











