Blue Sattai Maran - லியோ சர்ச்சை வசனம்.. லோகேஷ் கனகராஜ் உருட்டுகிறார்.. ப்ளூ சட்டை மாறன் அதிரடி
சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) லியோ படத்தில் விஜய் கெட்ட வார்த்தை பேசிய விஷயத்தில் லோகேஷ் கனகராஜ் உருட்டுகிறார் என்று ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார்.
தமிழின் டாப் ஹீரோவான விஜய் இப்போது சூப்பர் ஸ்டார் ரேஸில் இருக்கிறார்.அதற்கு காரணம் அவரது படங்கள் பெரும்பாலும் அசால்ட்டாக நூறு கோடி ரூபாயை வசூலித்துவிடுகின்றன. இருந்தாலும் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகியவை விமர்சன ரீதியாக கடும் விமர்சனத்தையும், ட்ரோலையும் சந்தித்தன. எனவே விமர்சனம்,வணிகம் ஆகிய இரண்டு ரீதியிலும் ஒரு ஹிட்டுக்கு காத்திருக்கிறார் விஜய்.

லியோ: அதனை பூர்த்தி செய்ய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்த மாஸ்டர் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. அதைவிட அதிக ரெஸ்பான்ஸை இந்தப் படம் பெறும் என்ற நம்பிக்கை தளபதி ரசிகர்களிடம் இருக்கிறது.
லியோ ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமடைந்திருக்கின்றன. ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடித்திருக்கின்றன. எனவே படத்திலிருந்து அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகின.
ட்ரெயலர் ரிலீஸ்: இந்த சூழலில் உச்சக்கட்டமாக லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதேசமயம் ட்ரெய்லரில் விஜய் கெட்டவார்த்தை பேசியது சர்ச்சையையும் கண்டனத்தையும் பெற்றிருக்கிறது. மேலும் விஜய் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கிறார் என்றும் பலர் ஓபனாகவே பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
லோகேஷின் உருட்டு: இந்த சர்ச்சை குறித்து விஜய் எதுவும் பேசாமல் இருக்கிறார். ஆனால் லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "லியோ ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்த ஆபாச வார்த்தை கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் ரொம்பவே தேவைப்பட்டது. இந்த வசனத்தை பேசலாமா என்று விஜய் தயக்கத்துடன் கேட்டார். ஆனால் கதாபாத்திரத்துக்கு இது தேவை என்பதால் நான் பேசுமாறு அழுத்தமாக கூறினேன். அதற்கு அடுத்ததுதான் அந்த வசனத்தை அவர் பேசியிருந்தார்" என்றார்.
லோகேஷ் கனகராஜின் இந்த விளக்கத்தையும் பலர் கடுமையாக எதிர்த்துவருகின்றனர். ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் கொடுத்த விளக்கத்தை பகிர்ந்து, உருட்டு என குறிப்பிட்டுள்ளார். அதாவது லோகேஷ் கனகராஜ் செமயாக பொய் சொல்கிறார் என்பதை அவர் இந்த வார்த்தையின் மூலம் சுட்டிக்காட்டுகிறார். அவரது ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











