Leo Trailer - கெட்ட வார்த்தை வருதே.. லியோ ட்ரெய்லர் ஃபேக்கா டுபாக்கூர்ஸ்.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்

சென்னை: Leo Trailer (லியோ ட்ரெய்லர்) லியோ ட்ரெய்லரில் வரும் கெட்ட வார்த்தை குறித்து ப்ளூ சட்டை மாறன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

லியோ ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ட்ரெய்லரை பார்க்கும்போது அமைதியான வாழ்க்கையை தனது மனைவி த்ரிஷா மற்றும் குழந்தையுடன் காஷ்மீரில் வாழ்ந்துகொண்டிருக்கும் பார்த்திபனை (விஜய்) சஞ்சய் தத், அர்ஜுன் கும்பல் தேடி வந்து தொந்தரவு செய்கிறது. அதற்கு காரணம் பார்த்திபனை லியோ (விஜய்) என்று நினைப்பதுதான் என்பதுபோல் ட்ரெய்லர் செல்கிறது.

Blue Sattai Maran Criticized Leo Trailer And Vijay Fans For Bad Words

பயங்கர ட்விஸ்ட்: லியோ படத்தில் விஜய்க்கு இரண்டு கெட்டப்புகள் என்று கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் கசிந்துக்கொண்டிருந்தன. அந்த தகவல்களை ட்ரெய்லர் உறுதிப்படுத்தியிருக்கிறது. அதேசமயம் ட்ரெய்லரை பார்க்கும்போது படத்தில் விஜய் டபுள் ஆக்‌ஷனா இல்லை லியோ தாஸ்தான் பார்த்திபனாக காஷ்மீரில் வாழ்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. எனவே கண்டிப்பாக படத்தில் பயங்கர ட்விஸ்ட் இருப்பது உறுதியாகியிருக்கிறது.

கெட்ட வார்த்தை: லோகேஷ் கனகராஜின் படங்கள் என்றாலே வன்முறை அதிக அளவு இருக்கும். அது இந்தப் படத்திலும் நிறைந்தே காணப்படுகிறது. உச்சக்கட்டமாக தே** பையா என்ற கெட்ட வார்த்தையை விஜய் த்ரிஷாவிடம் இந்த ட்ரெய்லரில் சொல்கிறார். இதை பார்த்த பலருக்கும் ஷாக். ஏனெனில் விஜய் இதுபோன்று பேசி நடித்ததில்லை.

Blue Sattai Maran Criticized Leo Trailer And Vijay Fans For Bad Words

ஃபேக் சர்ட்டிஃபிகேட்: இதற்கிடையே லியோ படத்துக்கு சென்சார் யு/ஏ சர்ட்டிஃபிகேட் கொடுத்திருக்கிறது. இந்த சூழலில் இன்று காலையில் லியோ படத்தின் சென்சார் சர்ட்டிஃபிகேட் என ஒரு புகைப்படம் பரவியது. படத்தில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் இருப்பதால் எந்தெந்த இடத்தில் பீப் சவுண்டு போட வேண்டும், ரன்னிங் டைம் போன்ற தகவல்கள் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருந்தன.

ஆனால் அது லியோ சென்சார் சர்ட்டிஃபிகேட் இல்லை லியோ படத்துக்கு நெகட்டிவ் ப்ரோமோஷன் செய்ய இதுபோன்ற புகைப்படங்களை ஃபேக்காக பரவ விடுகிறார்கள் எனவும் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கூறிவந்தனர்.

ப்ளூ சட்டை விமர்சனம்: இந்நிலையில் லியோ ட்ரெய்லரில் விஜய் ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை பேசுவதை குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில், "லியோ ட்ரைலர். 'எவனோ ஒரு தே**யா பையன் என்னை மாதிரி'.... விஜய் பேசும் வசனம்.

Censor certificate fake னு சொன்ன டுபாக்கூர்ஸ். ட்ரைலர்லயே இந்த கெட்ட வார்த்தை வருது. அப்ப படத்துல எத்தனை இருக்கோ. இப்ப என்னடா சொல்லுறீங்க? இதுவும் ஃபேக்கா? என கேள்வி எழுப்பியிருக்கிறார். அதேபோல் மற்றொரு பதிவில், 'அது ஃபேக் சென்சார் சர்டிஃபிகேட். இது ஃபேக் ட்ரைலர்' 2K Boomers கதறல்" என பதிவிட்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி லியோ ட்ரைலரில் தே**யா பையன் என கெட்டவார்த்தை பேசும் விஜய். மாணவர்கள், இளைஞர்களுக்கு தவறான உதாரணமாக இருக்க காரணம்..லோகேஷ் கனகராஜா, விஜய்யா இல்லை இருவருமா என்பது போல் ஒன்றையும் போட்டிருக்கிறார். லியோ ட்ரெய்லர் வெளியாகி ஒரு மணி நேரம்கூட ஆகாத சூழலில் ப்ளூ சட்டை மாறன் பஞ்சாயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X