Blue Sattai Maran - மாவீரன் இயக்குநர் காப்பி அடித்த படங்கள் இவைதான் - ப்ளூ சட்டை மாறன்
சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) மாவீரன் படத்தை இயக்கிய மடோன் அஸ்வினின் இரண்டு படங்களுமே காப்பிதான் என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர் மடோன் அஸ்வின். யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல் குறும்படங்கள் எடுத்து அதன் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தவர். அவர் முதல் படமாக யோகிபாபுவை வைத்து மண்டேலா படத்தை இயக்கினார். பொலிட்டிக்கல் சட்டையர் ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்று தேசிய விருதையும் வென்றது.

மாவீரன்: முதல் படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு இரண்டாவது படமாக சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் படத்தை இயக்கினார். கடந்த 14ஆம் தேதி படமானது வெளியானது. சிவகார்த்திகேயனுடன் மிஷ்கின், சரிதா, யோகிபாபு, அதிதி ஷங்கர் உள்ளிட்டோ ர் நடித்திருந்தனர். படம் ஃபேண்டஸி ஜானரில் உருவாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும் சிவகார்த்திகேயனின் நடிப்பும் அருமையாக இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
வசூலிலும் மாஸ்: விமர்சன ரீதியாக படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைப்பது போல் வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. அதன்படி இதுவரை உலகம் முழுவதும் 75 கோடி ரூபாயை மாவீரன் வசூலித்திருப்பதாக நேற்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் விரைவில் டாக்டர், டான் போலவே மாவீரன் படமும் 100 கோடி க்ளப்பில் இணைந்து விடும் என்ற நம்பிக்கையையும் எஸ்கே ரசிகர்கள் கொண்டிருக்கின்றனர்.
மடோனுக்கு நன்றி: டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களும் மெகா ஹிட்டாகின. ஆனால் பிரின்ஸ் படமோ படுதோல்வியை சந்தித்தது. எனவே இந்தப் படம் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிர்பந்தம் இருந்தது. அதனை மடோன் அஸ்வின் தனது கதையின் மூலம் சாத்தியமாக்கிவிட்டார். அவருக்கு நன்றி என சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் கமெண்ட்ஸ் செய்துவந்தனர். அதுமட்டுமின்றி அவரோடு மீண்டும் எஸ்கே இணைய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

காப்பி கதை: இந்நிலையில் மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா மற்றும் மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே காப்பி அடிக்கப்பட்டவை என பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அதன்படி 2008ஆம் அண்டு வெளியான ஸ்விங் ஓட் என்ற ஆங்கில படம்தான் மண்டேலா என்றும்; 2006ஆம் ஆண்டு வெளியான ஸ்ட்ரேஞ்சர் தென் ஃபிக்ஷன் என்ற படம்தான் மாவீரன் படம்" என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மாவீரன் திருட்டு கதை: இதற்கிடையே ப்ரியதர்ஷனின் உதவி இயக்குநர் பினு சுப்பிரமணியன் என்பவர் எழுதிய அப்பார்ட்மெண்ட் என்ற கதையைத்தான் பட்டி டிங்கரிங் பார்த்து மாவீரன் படமாக மடோன் அஷ்வின் கொடுத்துவிட்டார் என ஒரு தகவல் வெளியாகி சமீபத்தில் பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதுகுறித்து படக்குழு எதுவும் விளக்கமளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











