Blue Sattai Maran - ரசிகர்களுக்கு சோறுகூட போடாதவர் ரஜினிகாந்த்.. வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ரஜினிகாந்த்தை மறைமுகமாக விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் தனியாக யூட்யூப் சேனல் ஆரம்பித்து அதில் திரைப்பட விமர்சனங்களை பதிவிட்டுவருகிறார். அவரது விமர்சனத்துக்கு பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். அதேசமயம் விமர்சனத்தில் எல்லை மீறி செல்வதாகவும் பலர் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விமர்சனத்தை முன்வைப்பார்கள். மேலும் எல்லார் படங்களையும் சகட்டுமேனிக்கு விளாசுகிறாரே இவர் ஒரு படம் எடுத்தால் என்ன என்றும் ரசிகர்கள் கேள்விகள் எழுப்பினர்.

Blue Sattai Maran Criticized Rajinikanth 09-08-2023

ஆண்ட்டி இந்தியன்: அதனையடுத்து ஆண்ட்டி இந்தியன் என்ற படத்தை இயக்கினார். பாரதிராஜா உள்ளிட்டோருக்கு சிறப்பு காட்சியையும் போட்டு காண்பித்தார். ரிலீஸானதும் படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினர். இப்படி படம் எடுக்கும் ஒருவர்தான் மற்ற படங்களை விமர்சிக்கிறாரா என ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர். ஆனால் ப்ளூ சட்டை மாறன் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

மாறன் Vs ரஜினி: இந்தச் சூழலில் சமீபகாலமாக ரஜினிகாந்த்தை கடுமையாக தாக்கிவருகிறார் ப்ளூ சட்டை மாறன். குறிப்பாக சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஆரம்பித்திலிருந்து ரஜினியை தாக்கிவரும் அவர்; ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன காக்கா, பருந்து கதையிலிருந்து ரஜினியை பருந்து என்றே அழைத்து வருகிறார் மாறன். இதற்கு ரசிகர்களும் கமெண்ட்ஸ் செக்‌ஷனில் பதிலடி கொடுக்கின்றனர். ஆனாலும் தொடர்ந்து ரஜினி மீதான விமர்சனத்தையும், நக்கலையும் தொடர்ந்து முன்வைத்துவருகிறார்.

மது சப்ளை: குறிப்பாக மது குடிக்க வேண்டாம் என ரஜினி அட்வைஸ் செய்வார்.ஆனால் அவருக்கு சொந்தமான இடத்திலேயே மது விடுதி நடந்துகொண்டிருக்கிறது என கூறியவர்; ரஜினி அவ்வாறு பேசிய அரங்கத்திலேயே மது சப்ளை தாராளமாக நடந்தது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவர் மீது ரஜினிகாந்த் ரசிகர்கள் கடுங்கோபத்தில் இருக்கின்றனர்.

நேற்றுக்கூட, உன்னை நேரில் பார்த்தால் சளுப்பு சளுப்பு என்று அறைந்துவிடுவேன் என ரசிகர் ஒருவர் மாறனிடம் கூற அதற்கு மாறனோ ஜெயிலர் பார்க்க மாயாஜால் வருவேன் தைரியம் இருந்தால் வா என ஒரே போடாக போட்டார். தற்போது ப்ளூ சட்டை மாறன் ரஜினிக்கு எதிராக மற்றொரு ட்வீட்டை பதிவு செய்திருக்கிறார்.

Blue Sattai Maran Criticized Rajinikanth 09-08-2023

என்ன ட்வீட்: அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "The unfulfilled promises: 2010 and 2019. என் மகளின் திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு ரசிகர்கள் வரவேண்டாம். ஒருநாள் மணமக்களை உங்களுக்கு நானே அறிமுகம் செய்கிறேன். விருந்தும் அளிக்கிறேன். மதுரை ரசிகர்களுக்கு கறிசோறு போட ஆசை. ஆனால் இது சைவ மண்டபம் (அருகில் வேறு மண்டபம் அல்லது ஹோட்டலை புக் செய்து விருந்து போட்டிருக்கலாமே).தமிழ் சினிமாவில் பல லட்சம் பேருக்கு தொடர்ந்து உணவளித்தது இரண்டு வள்ளல்கள் மட்டுமே. மக்கள் திலகமும், கேப்டனும்" என குறிப்பிட்டிருக்கிறார்.

என்ன அர்த்தம்?: அதாவது, தனது இளைய மகளின் முதல் திருமணத்தின்போது மகள் திருமணத்திற்கு ரசிகர்கள் வரவேண்டாம் என ரஜினி அறிவித்திருந்தார். அதேபோல் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது தன்னை சந்திக்க வந்த ரசிகர்களிடம் மதுரை ரசிகர்களுக்கு கறிசோறு போட ஆசை.

ஆனால் ராகவேந்திரா மண்டப சைவ மண்டபம் என ரஜினி கூறியிருந்தார். இதனை மறைமுகமாக குத்தி காண்பித்து ரசிகர்களுக்கு சோறுகூட போடாதவர் ரஜினிகாந்த் என ப்ளூ சட்டை மாறன் சொல்வதாக கருதப்படுகிறது. இதற்கு ரஜினியின் ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர். ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் நாளை வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X