தலைவர் இடம் பறிபோன பதட்டத்தில்..போஸ்டரை கிழிக்கும் பருந்து குஞ்சுகள்.. ப்ளூ சட்டை மாறன் அலப்பறை!
சென்னை: தலைவர் இடம் பறிபோன பதட்டத்தில் போஸ்டரை கிழிக்கும் பருந்து குஞ்சுகள் என ரஜினி ரசிகர்களை சீண்டும் வகையில் ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள ஜெயிலர் திரைப்படம்,பான் இந்தியத் திரைப்படமாக வரும் 10ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இப்படத்தில் முத்துவேல்பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். அவரது மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். படையப்பா படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
பட்டம் யாருக்கு : சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்று கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்த சண்டையை தூண்டும் வகையில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான ஹூக்குமில் பேர தூக்க நாலும் பேரு... பட்டத்த பறிக்க நூறு பேரு...குட்டி செவுத்த எட்டி பார்த்தா...உசிரு கொடுக்க கோடி பேரு விஜய்னை கேலி செய்யும் வகையில் வரிகள் இருந்த. இதை வைத்து இணையத்தில் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே ஒரு பனிப்போர் நடந்து வருகிறது.
சலசலப்பை ஏற்படுத்திய ரஜினி பேச்சு: ஏற்கனவே இருக்கும் பிரச்சனையில் எண்ணையை ஊற்றுவது போல,ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் காக்கா எவ்வளவு தான் தொல்லை கொடுத்தாலும், கழுகு அமைதியாக யாருக்கும் தொல்லை கொடுக்காமல் உயரமாக பறந்து கொண்டே இருக்கும் என்று பேசி இருந்தார். ஏற்கனவே ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே பட்டம் குறித்து கருத்து மோதல்கள் நடந்து வரும் நிலையில் ரஜினி பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
உனக்கு ஏன் அச்சம்: லியோ இசைவெளியீட்டு விழாவில் ரஜினியின் இந்த பேச்சுக்கு விஜய் நிச்சயம் பதில் அடி கொடுப்பார் என்று அனைவரும் லியோ படத்தின் இசைவெளியீட்டு விழாவை எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும், விஜய்யின் ரசிகர்கள் ரஜினியின் ரசிகர்களை வம்பு இழுக்கும் வகையில், மதுரை முழுவதும் 'என்னுடைய உச்சம்... உனக்கு ஏன் அச்சம்' என்ற போஸ்டரை ஒட்டி இருந்தனர்.இந்த போஸ்டரை ரஜினி ரசிகர்கள் கழித்துள்ளனர்.
அச்சத்தின் பருந்துகள்: இந்நிலையில், ப்ளு சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி ரசிகர்கள் போஸ்டரை கிழிக்கும் போட்டோவை ஷேர் செய்து, தலைவர் தன் இடம் பறிபோன பதட்டத்தில்.. பட்டத்தை பறிக்க 100 பேரு, பருந்து காக்கா என குமுறுகிறார். பருந்து குஞ்சுகள் அச்சத்தின் உச்சத்தில் போஸ்டரை கிழிக்கின்றன என ரஜினி ரசிகர்களை தொடர்ந்து வம்பு இழுக்கும் வகையில் தொடர்ந்து ட்வீட் போட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications