Santhanam - கோடம்பாக்கத்தின் புதிய சங்கி சந்தானம்.. பங்கம் செய்த ப்ளூ சட்டை.. இந்தப் பஞ்சாயத்து எப்போ ஓயுமோ?
சென்னை: நடிகர் சந்தானம் கோலிவுட்டின் டாப் காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருந்தார். அவரது கவுண்ட்டர்களும், டைமிங்குகளும் வெகுவாகவே ரசிக்கப்பட்டன. ஒருகட்டத்தில் அவருக்கு ஹீரோ ஆசை வந்துவிட தொடர்ந்து ஹீரோவாகவே நடித்துவருகிறார். அந்தவகையில் அவர் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்திருக்கிறார். படமானது அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி ஆக்டர்களில் ஒருவர் சந்தானம். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் ஆகியோர் பீக்கில் இருந்தபோது எப்படி அவர்கள் இல்லாமல் ஒரு படம்கூட வந்தது இல்லையோ அதேபோல்தான் சந்தானம் பீக்கில் இருந்தபோதும் அவர் இல்லாமல் ஒரு படம்கூட வெளியாகவில்லை. அந்த அளவுக்கு பிஸியாகவும், வெரைட்டியாகவும் நடித்தார் சந்தானம்.

டைமிங்கில் கில்லி: கவுண்டமணியின் ஃபார்முலாவை ஃபாலோ செய்த சந்தானம் தனது டைமிங் காமெடியால் வயிறு குலுங்க ரசிகர்களை சிரிக்க வைத்தவர். இன்றுவரை அவர் நடித்த சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், சேட்டை, ஒரு கல் ஒரு கண்ணாடி என பல படங்களின் காமெடி ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு பயங்கரமாக சிரிக்க வைத்தாரோ அதே அளவு அவர் சர்ச்சைகளையும் சந்தித்தார். உதாரணமாக என்றென்றும் புன்னகை படத்தில் ஒரு பெண்ணிடம் அவர் சொல்லும் வசனம் பயங்கர விமர்சனத்தை சந்தித்தது.மேலும் அடுத்தவரை ரொம்பவே உருவ கேலி செய்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
ஹீரோ சந்தானம்: தனது கரியரின் உச்சத்தில் இருந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து ஹீரோவாகவே நடித்துவருகிறார் அவர். அந்தவகையில் அவர் இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, டகால்டி, ஏ1 என வரிசையாக நடித்தார்.
காமெடி கலந்த கதைதான்: தன்னுடைய பலமான காமெடியை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதைகளையே தேர்ந்தெடுத்து ஹீரோவாக நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த டிக்கிலோனா படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இருந்தாலும் பெரிய ஹிட் ஒன்றுக்காக காத்திருந்தார் சந்தானம். அந்தவகையில் அவர் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது.
வடக்குப்பட்டி ராமசாமி: ஆனால் அடுத்ததாக வெளியான கிக் படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து 80ஸ் பில்ட் அப் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படமும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்த சூழலில் அவர் வடக்குப்பட்டி ராமசாமி என்ற புதிய படத்தில் நடித்திருக்கிறார். படமானது பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாகிறது.
சர்ச்சை: இந்நிலையில் அந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக சந்தானம் பகிர்ந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது அந்த வீடியோவில் சந்தானம் பூஜை செய்யும்படியும்; அப்போது ஒருவர் வந்து கடவுள் இல்லைனு சொல்லிட்டு சுத்திட்டு திரிஞ்சியே அந்த ராமசாமிதானே நீ என்று கேட்க; அதற்கு சந்தானம் நான் அந்த ராமசாமி இல்லை என்று சொல்லி கற்பூரத்தை காட்டும்படியும் காட்சிகள் இருந்தன. இதனை பார்த்த ரசிகர்கள், சந்தானம் தந்தை பெரியாரைத்தான் இப்படி கிண்டல் அடித்திருக்கிறார் என்று கண்டனத்தை பதிவு செய்தனர்.
விவகாரம் முற்றிப்போவதை உணர்ந்த சந்தானம் உடனடியாக அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கினார். இருந்தாலும் அதற்குள் அந்த வீடியோ பலரிடமும் சென்று சேர்ந்துவிட்டது. இது சந்தானத்துக்கு எதிராக பலரையும் திருப்பியிருக்கிறது. அந்தவகையில் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், கோடம்பாக்கத்தின் புதிய சங்கி.. சந்தானம் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











