அடச்சீ.. படங்கள் குடும்ப சித்திரம்.. நிஜத்தில் கில்மாத்தனம்.. சீனு ராமசாமியை வெளுத்த ப்ளூ சட்டை
சென்னை: Seenu Ramasamy (சீனு ராமசாமி) மனிஷா யாதவ் விவகாரத்தில் ப்ளூ சட்டை மாறன் சீனு ராமசாமியை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசிய விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வந்துவிட்டது. அந்தப் பஞ்சாயத்து முடிந்த கையோடு இன்னொரு பஞ்சாயத்தும் எழுந்திருக்கிறது. அதாவது பிஸ்மி அளித்த ஒரு பேட்டியில், சீனு ராமசாமி மனிஷா யாதவ்வுக்கு இடம் பொருள் ஏவல் படத்தில் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.

சீனு ராமசாமி விளக்கம்: பிஸ்மியின் இந்தக் குற்றச்சாட்டு மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அதற்கு பதிலளித்த சீனு ராமசாமி, ஒரு குப்பை கதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மனிஷா யாதவ் தனக்கு நன்றி சொல்லும் வீடியோவை பகிர்ந்திருந்தார். ஆனால் அதற்கு பதிலளித்த மனிஷா, 'அந்த மேடையில் எல்லோருக்கும் சொல்வதுபோல்தான் அவருக்கும் நன்றி சொன்னேன். அதனால் எதுவும் மாறிவிடாது. 9 வருடங்களுக்கு முன்னர் நான் சொன்னதுதான் உண்மை’ என கூறியிருந்தார்.
பேட்டி நீக்கம்: விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட யூட்யூப் சேனல் பிஸ்மியின் பேட்டியை நீக்கியது. அவ்வாறு பேட்டி நீக்கப்பட்டதற்கு சீனு ராமசாமியின் அழுத்தம்தான் காரணம் என்ற கூற்றும் எழுந்திருக்கிறது. மேலும் பிஸ்மி வெளியிட்ட இன்னொரு வீடியோவில், மனிஷா யாதவுக்கு ஃபோன் செய்து தன்னுடைய படத்தில் நடிக்கும்படி சீனு ராமசாமி கேட்டதாகவும் தெரிவித்தார்.
ப்ளூ சட்டை ட்வீட்: இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த விவகாரத்தில் சீனு ராமசாமியை கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உண்மையை மறைக்க சுகர் ராமசாமி எடுத்த நான்கு முயற்சிகளும் படுதோல்வி.மனிஷாவிடம் இவர் தவறாக நடக்க முயற்சி செய்தது பற்றி பத்திரிக்கையாளர் பிஸ்மி பேசியது தனியார் யூட்யூப் சேனலில் வெளியானது. உடனே பிஸ்மிக்கு போன் செய்து இந்த மேட்டரை ஆஃப் செய்ய முயற்சி செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
வீடியோ: அடுத்து அந்த பேட்டி சம்பந்தப்பட்ட யூட்யூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு பின்னாலும் சுகர் இருந்தாராம். அங்கு நீக்கப்பட்டாலும்... சோஷியல் மீடியாவில் வைரலாகி அந்த வீடியோ தற்போதும் வலம் வருகிறது. ஆகவே இரண்டாவது முயற்சியும் தோல்வி. அடுத்து தனது ட்வீட் பக்கத்தில்...ஒரு வீடியோ க்ளிப் வெளியிட்டார். 'ஒரு குப்பைக்கதை' பட ப்ரமோஷனில் மேடையில் அமர்ந்திருந்த சுகருக்கு மனீஷா நன்றி சொன்ன வீடியோதான் அது.
நன்றி சொன்னார்: 'எனக்கு அவர் நன்றி சொல்லி இருக்கிறார். ஆகவே நான் எப்படி இடம், பொருள். ஏவல் ஷூட்டிங் சமயத்தில் அவரிடம் தவறாக நடந்திருக்க முடியும்?' என கதைவிட்டார் சுகர். அதற்கு பதிலடி தரும் விதமாக 'மேடையில் உள்ள பலருக்கு நன்றி சொல்லும்போது சபை நாகரீகம் கருதி இவருக்கும் நன்றி சொன்னேன். அதற்காக இவரை நல்லவர் என்று ஒப்புக்கொள்ள முடியாது' என இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் சுகரை பொளந்து கட்டினார் மனீஷா. ஆகவே சுகரின் மூன்றாவது முயற்சியும் ஊத்திக்கொண்டது.
இமேஜ் டேமேஜ்: தனது இமேஜ் தாறுமாறாக டேமேஜ் ஆகிக்கொண்டு இருப்பதால்... இறுதி முயற்சியாக... தனது ஆபீஸ் ஆட்களை விட்டு மனிஷாவிற்கு போன் செய்ய சொன்னார். தானே பேசினால் தர்ம அடி விழும் என்கிற பயமே அதற்கு காரணம் 'சார் ஒரு புதுப்படம் டைரக்ட் செய்கிறார். உங்களுக்கு ஒரு வக்கீல் கேரக்டர் உள்ளது. நடிக்கிறீர்களா?' என கேட்க 'நடிக்க முடியாது. போனை வையுங்கள்' என மீண்டும் ஒரு முறை பதிலடி தந்துவிட்டார் மனீஷா. ஆகவே சுகரின் நான்காவது முயற்சியும் பணால் ஆகிவிட்டது.
அடச்சீ: தப்பு செய்யாதவன் தைரியமாக இருப்பான். டகால்டி வேலை செய்தால் மட்டுமே இப்படி பிரச்னையை மூடி மறைக்க விதவிதமாக பலரது காலில் விழுந்து மேட்டரை ஆஃப் செய்ய அல்லாடுவான். எடுக்கிற படங்கள் எல்லாம் குடும்ப சித்திரம். பொது இடங்களில் போடும் வேடம் குணச்சித்திரம். ஆனால் நிஜத்தில் கில்மாத்தனம். அடச்சீ....


Click it and Unblock the Notifications











