Vijay Ajith: "ரெய்டுக்கு பயந்து வேஷம் போடும் விஜய்... தில்லா இருக்கும் அஜித்" ப்ளூ சட்டை மாறன் பஞ்ச்

சென்னை: விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது.

லோகேஷ் இயக்கத்தில் லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

Vijay Ajith: Blue Sattai Maran criticized Vijay for fear of an IT raid, and Ajith is not like that!

இதனையடுத்து லியோ படத்தின் வெற்றி விழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விஜய் பேசியதை விமர்சித்துள்ள ப்ளூ சட்டை மாறன், அஜித் தான் மிஸ்டர் க்ளீன் என பாராட்டியுள்ளார்.

விஜய்யை விட அஜித் தான் பெஸ்ட்
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீஸானது. பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியான லியோ, கலவையான விமர்சனங்களுடன் 550 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் முன்னிலையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், விஜய்யின் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. முக்கியமாக விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி, ரஜினிக்கு பதிலடியாக அமைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல், ஒரேயொரு மக்கள் திலகம், ஒரேயொரு சூப்பர் ஸ்டார், ஒரேயொரு உலகநாயகன், ஒரேயொரு தல என சொன்ன விஜய், நான் மன்னர்களாகிய மக்களின் தளபதியாகவே இருந்துகொள்கிறேன் என பஞ்ச் வைத்தார்.

அதேநேரம் இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ப்ளாக்கில் விற்கப்பட்டதாகவும், பாஸ் இருந்தவ சில ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் சர்ச்சை ஆனது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் சட்டை நிறம், நெற்றியில் குங்குமம் வைத்திருந்தது, அரசியல் பேச்சு அனைத்துமே வைரலாகி வருகிறது. '2026ல் கப்பு முக்கியம் பிகிலு’ என விஜய் தனது அரசியல் என்ட்ரி குறித்து மறைமுகமாக லீட் கொடுக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், லியோ சக்சஸ் மீட்டில் விஜய்யின் பேச்சு, அவரது அரசியல் வருகை ஆகியவை குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். விஜய்யை விட அஜித் தான் பெஸ்ட் என்பதாக அவர் விமர்சித்துள்ளது தளபதி ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. அதாவது, “கருப்புப் பணத்துல சம்பளம் வாங்கறவன், ப்ளாக் டிக்கட்டை பல்க்கா விக்கிறவன், தன்னோட பினாமியை தயாரிப்பாளரா ஆக்குறவன், அரசியலுக்கு வரப்போறேன்னு அல்வா குடுக்கறவன்தான் ரெய்டு வந்தா பயப்படணும்.”

”ரெய்டு இல்லாத வாழ்க்கை வேணும். கம்முனு இருந்தா ஜம்முனு இருக்கலாம்னு ஆடியோ லாஞ்ச்ல பம்மணும். காவிச் சட்டை, குங்குமம் வேசம் போடணும். வெள்ளைப் பணத்தை சம்பளமா வாங்கி, ஒழுங்கா வரி கட்டுறவன் நிம்மதியா தூங்கலாம். ரெய்டு வந்தா தில்லா ஃபேஸ் பண்ணலாம். கலர் கலரா வேசம் போடாம.. இயல்பான பேச்சு, உடை அணிந்து மக்களை சந்திக்கலாம். The name is Ajith” என பதிவிட்டுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவுக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X