சிவகார்த்திகேயனின் சேயோன்.. அறிவிப்பு வந்ததும் ப்ளு சட்டை மாறனும் வந்துட்டாரு.. இந்த கிழி கிழிக்கிறாரே
சென்னை: தாய் கிழவி படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். படத்துக்கு சேயோன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கிறார். நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சூழலில்; இன்று படத்துடைய க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகின. இந்நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
பராசக்தி படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதாக இருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால் அதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகளுக்கு கால தாமதம் ஆகும் என்பதால்; அந்த கேப்பில் இன்னொரு படத்தில் நடிக்க முடிவு செய்தார். அந்த சமயத்தில்தான் தாய் கிழவி படத்தை பார்த்தார் எஸ்கே. படத்தை பார்த்து ரொம்பவே ஈர்க்கப்பட்ட அவர்; உடனடியாக அதன் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டார்.
கமல்ஹாசன் தயாரிப்பு: ஏற்கனவே அமரன் படம் பெற்ற மெகா வெற்றியால்; சிவாவை வைத்து இன்னொரு படத்தை தயாரிக்கும் திட்டத்தில் இருந்தது கமலின் ராஜ்கமல் நிறுவனம். எனவே சிவகார்த்திகேயன் - சிவக்குமார் இணைந்திருக்கும் படத்தினை தயாரிக்கவும் முன்வந்திருக்கிறது. படத்துக்கு சேயோன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோடு பெயரும் அறிவிக்கப்பட்டது. அது எஸ்கே ரசிகர்களிடையே பெரிய மகிழ்ச்சியை உண்டு செய்தது.

இன்று வெளியான க்ளிம்ப்ஸ்: இன்று சிவகார்த்திகேயன் தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகளும் வெளியாகியிருக்கின்றன. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். க்ளிம்ப்ஸில் சிவா சாமி ஆடியபடி வந்து எதிரிகளை துவம்சம் செய்யும்படியான காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது இந்த க்ளிம்ப்ஸ் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
பி&சி ஹிட் கன்ஃபார்ம்: முக்கியமாக இப்படம் பி&சி ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையப்போவதை இந்த க்ளிம்ப்ஸ் உறுதி செய்திருக்கிறது. கிராமத்து இளைஞராக ஒரு பவர் ஃபுல் வேடத்தை இதில் அவர் ஏற்பார் என்றும்; மதுரையை சுற்றி நடக்கும் கதையாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும் அமரன் படம் மாதிரியே இந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்ற நம்பிக்கையையும், ஆரூடத்தையும் எஸ்கேவின் ரசிகர்கள் இப்போதே உறுதியாக சொல்ல தொடங்கிவிட்டார்கள். இதில் யார் யார் பணியாற்றுகிறார்கள் என்ற மேலதிக விவரங்கள் அடுத்தடுத்த அறிவிப்புகளில் தெரியவரும்
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் சேயோன் படத்தின் அறிவிப்பையும், போஸ்டரையும் எஸ்கே ரசிகர்கள் கொண்டாடும் சூழலில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அந்த ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "போஸ்டர்ல அருவாள், கத்தி, துப்பாக்கி, ரத்தம், சிகரெட் இல்லாம ஒருத்தனும் போஸ் தர மாட்றான். ப்ரமோஷன் டைம்ல.. கல்லூரி மாணவர்கள் பெத்தவங்களை மதிக்கனும், நல்லா படிக்கனும்னு புத்திமதிகள் வேற" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக, சமீபமாக வரும் தமிழ் சினிமாக்களில் வன்முறை காட்சிகள் அதிகம் இடம்பெறுகின்றன. அந்த மாதிரியான காட்சிகளும் தமிழ்நாடு இளைஞர்கள் கத்தியையும், அரிவாளையும் தூக்கி அசம்பாவித செயல்களில் ஈடுபடுவதற்கு ஒரு காரணமாக இருக்கின்றன என்ற விமர்சனங்கள் அதிகம் எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











