அதிமுக தனபால் மகனுக்கு தவெகவில் வாய்ப்பு.. மாரி செல்வராஜ் உதயநிதி வரை இழுத்து விட்ட பிரபலம்
சென்னை: தமிழ்நாடு இம்முறை நான்கு முனைப் போட்டியாக தேர்தலை எதிர்கொள்கிறது. இப்படி அரசியல் விமர்சகர்கள் கூறினாலும், நடிகர் விஜய் நான்கு முனை போட்டி எல்லாம் இல்லை, இரண்டு முனைப் போட்டிதான் என்று தெரிவித்து தனது கட்சி சார்பாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். விஜய் தனது கட்சி வேட்பாளர்களை கடைசியாக அறிவிக்க காரணமே, மாற்று கட்சியில் எம்.எல்.ஏவுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியாளர்களுக்கு தவெகவில் வாய்ப்பு கொடுத்துள்ளார் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
அப்படி ஒருவர் தான் அதிமுகவின் முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களின் மகன், லோகேஷ் தமிழ்செல்வன். அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ராசிபுரம் தனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அதிமுகவில் தனபாலுக்கு இம்முறை எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு வழங்கவில்லை என்பதுதான் என்றும் கூறப்படுகிறது.

ப்ளூ சட்டை மாறன்: இப்படி இருக்கையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் தனது இது தொடர்பாக, " தலித் என்கிற ஒரே காரணத்தால்.. தனபாலை ஒதுக்கி வைத்தனர் சில அதிமுக புள்ளிகள். இதை அறிந்த ஜெயலலிதா 'இனி உங்களை நான் உட்பட அனைவரும் வணங்கும் உயரமான இடத்தில் வைக்கிறேன்' எனக் கூறி அவரை சபாநாயகர் ஆக்கினார். இதைத்தான் உல்டா செய்து திமுகவிற்கு சாதகமாக 'மாமன்னன்' படமாக எடுத்தார் மாரி செல்வராஜ். ஜெயலலிதாவிற்கு பதில் கருணாநிதியாக லால் கேரக்டர், தனபாலாக வடிவேலு. சேலம் பகுதியில் இதை நடப்பதாக காட்டி ஃபஹத் ஃபாசிலை வில்லனாக்கினார். அது EPS ஐ குறிக்கும்.
மாமன்னன்: இம்முறை தனபாலுக்கு எடப்பாடி சீட் தரவில்லை. அந்த தனபாலின் மகன்தான் இவர். ஜெயலலிதா இல்லாததால்.. தனபால் மீண்டும் சாதி ரீதியாக ஓரங்கட்டப்பட்டுள்ளார் என எண்ணத் தோன்றுகிறது. மாமன்னன் 2 எடுத்தால்.. தனபாலின் மகன்.. அதாவது உதயநிதி..தவெகவில் சேர்ந்த உண்மை சம்பவம் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாரி செல்வராஜ் வேறு ஒரு போலி கதை வைத்திருப்பார்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











