ஜெயிலர் பார்க்க மாயாஜால் வரேன்.. தில்லுருந்தா அங்க வா.. ரஜினி ரசிகருக்கு ப்ளூ சட்டை மாறன் சவால்!
சென்னை: ஜெயிலர் படத்தை பற்றி சன் பிக்சர்ஸ் பண்ணுவதை விட அதிகளவிலான நெகட்டிவ் ப்ரமோஷனை ப்ளூ சட்டை மாறன் பேசி வருகிறார் என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் பற்றியும் அவர் நடிப்பில் இந்த வாரம் வியாழக்கிழமை வெளியாக உள்ள ஜெயிலர் படம் பற்றியும் அவதூறு கருத்துக்களையும் ட்ரோல்களையும் பதிவிட்டு வரும் ப்ளூ சட்டை மாறனை நேரில் பார்த்தால் அடித்து விடுவேன் என ஒரு ரசிகர் ஆவேசமாக கமெண்ட் போட்டுள்ளார்.
எதற்கும் அஞ்சாதவானாக ரசிகர்கள் கமெண்ட்டுகளுக்கு பதிலடி கொடுத்து வரும் ப்ளூ சட்டை மாறன் தான் எந்த தியேட்டரில் எத்தனை மணிக்கு ஷோ பார்க்கப் போறேன் என்பதையே பதிவிட்டு ரஜினி ரசிகருக்கு சவால் விட்டுள்ளார்.
காக்காகாந்த் என கிண்டல்: பருந்து என நடிகர் ரஜினிகாந்தை கிண்டல் செய்து வந்த ப்ளூ சட்டை மாறன் தனது சமீபத்திய ட்வீட்டில் காக்காகாந்த் என எல்லை மீறி ட்ரோல் செய்துள்ளார். மேலும், தமிழ் சினிமாவில் அதிக வசூல் ஈட்டிய படம் என்றால் அது பொன்னியின் செல்வன் 500 கோடி மற்றும் கமலின் விக்ரம் 420 கோடி தான் என்றும் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் வசூல் எல்லாம் குறைவு என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மனிஷா கொய்ராலா பேட்டியை ஷேர் செய்து: பாபா படம் தோல்வியான பிறகு தென்னிந்திய சினிமாவில் தனது சினிமா வாழ்க்கை மொத்தமாக காலியானதாக நடிகை மனிஷா கொய்ராலா அளித்த பேட்டி வீடியோவையும் ஷேர் செய்து நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை ஓடவிடாமல் செய்ய எந்தளவுக்கு நெகட்டிவிட்டியை பரப்ப முடியுமோ அந்தளவுக்கு பரப்பி வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.
ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை: தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை ப்ளூ சட்டை மாறன் வம்பிழுத்து வரும் நிலையில், கடுப்பான ரஜினி ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை தொடர்ந்து கேவலமாக திட்டி வரும் நிலையில், ஒரு ரசிகர் ரொம்பவே கோபமடைந்து உன்னை நேர்ல பார்த்தா சலுப்பு சலுப்புன்னு அடிச்சிடுவேன் என கமெண்ட் போட்டிருக்கிறார்.

மாயாஜால்ல தான் படம் பார்க்கப் போறேன்: ஆனால், அதற்கு எல்லாம் கொஞ்சமும் பயப்படாமல் ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி மாயாஜால்ல தான் ஈவ்னிங் ஷோ பார்க்கப் போறேன். முடிஞ்சா அங்க வந்து அடிடா என சவால் விட்டுள்ளார். ஏற்கனவே பிவிஆர் சினிமாஸில் ப்ளூ சட்டை மாறன் படம் பார்க்கும் போது ரசிகர் ஒருவர் பின்னாடி இருந்து அடித்ததாக சர்ச்சைகள் வெடித்த நிலையில், மீண்டும் அதுபோன்ற பஞ்சாயத்து ஏற்படுமா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











