Don't Miss!
- News
வள்ளுவரை விட கருணாநிதி சிறந்தவரா? பேனா நினைவு சின்ன கருத்து கேட்பு கூட்டத்தில் பாஜக கேள்வி-சலசலப்பு
- Finance
Budget 2023: பட்ஜெட் நாளில் கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தை எப்படி இருந்தது தெரியுமா?
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சாந்தனுவை பிட்டுப்பட நடிகர் என விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்.. கொதித்தெழுந்த ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
சென்னை: விமர்சகர்களை விமர்சிக்காமல் படங்களை இயக்குநர்கள் சிறப்பாக எடுக்க வேண்டும் என ஆரிக்கு நடிகர் பாக்கியராஜ் மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை மறைமுகமாக சாந்தனு விமர்சித்த நிலையில், அவரை பிட்டுப்பட நடிகர் என பகிரங்கமாக விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
நடிகர் சாந்தனுவை இப்படி விமர்சித்ததை பார்த்த ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
தலைவர்
169
டைரக்டர்
விவகாரம்...
நெல்சனை
வச்சு
செய்யும்
நெட்டிசன்கள்

நல்ல வருமானம்
லாக்டவுனில் புதிய படங்கள் வராமல் விமர்சகர்கள், டிராக்கர்கள் என பலரும் கஷ்டப்பட்டு வந்த நிலையில், தற்போது தொடர்ந்து தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியாக நல்ல வருமானத்தை இவர்கள் பார்த்து வருகின்றனர். படம் ரிலீசாவதற்கு முன்னாடி பில்டப் கொடுப்பதும், படம் வெளியானதும் விமர்சனம் செய்து கழுவி ஊற்றுவதும், ஒரு சிலர் ஃபேக் பாக்ஸ் ஆபிஸ் கூறி தங்களின் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

ரசிகர்கள் சண்டை
மேலும், ரசிகர்கள் மத்தியில் ட்விட்டர் சண்டையை மூட்டி விட்டு அழகாக இந்த வெயிலில் குளிர் காய்ந்து வருகின்றனர். இவர்கள் ஒரு பக்கம் என்றால், இசை விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக செல்லும் நடிகர்கள் சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்பதற்காக மனதில் பட்டதையெல்லாம் பேசி சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர்.

பிட்டுப்பட நடிகர்
இந்நிலையில், தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சாந்தனு குறித்து போட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பி உள்ளது. " பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்களை 'தரமான செருப்படி' என்று மறைமுகமாக கிண்டல் செய்த 'முருங்கைக்காய் சிப்ஸ்' பிட்டுப்பட நடிகர். பதிலடி தந்த சினிமா ரசிகர்கள்." என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

சரியா சொன்ன மச்சி
பீஸ்ட் படத்தை தரக்குறைவாக விமர்சிப்பவர்களுக்கு எதிராக நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான ஆரி பேசிய வீடியோவை ஷேர் செய்த நடிகர் சாந்தனு, "சரியா சொன்ன மச்சி" என ட்வீட் போட்டு இருந்தார். அந்த ட்வீட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் ப்ளூ சட்டை மாறன் இப்படியொரு சர்ச்சை ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

இழிவுபடுத்துவது
"ஒரு படைப்பை அல்லது படைப்பாளியை பயங்கரமா விமர்சனம் செய்யுறதுக்கும் இழிவுபடுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. Hope I'm right" என மீண்டும் தனது கருத்தில் தான் மாறாமல் உள்ளேன் என்பதை நிரூபித்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட்டுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் சாந்தனு.
Recommended Video

முருங்கைக்காய் சிப்ஸ் நல்லா இருந்துச்சு
"ஒன்னு தெரியுமா மாறா? அந்த முருங்கைக்காய் சிப்ஸ் கூட நல்லாதான் இருந்துச்சு.. உன்னோட ஆன்டி இந்தியனோட ஒப்பிடும்போது!!" என ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கி வருகின்றனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சண்டையை விட சமீப காலமாக சினிமாக்காரர்களின் சண்டை இப்படி அதிகமாகிடுச்சே என பலரும் வேதனை அடைந்துள்ளனர்.