Blue Sattai Maran Devara Review: வேஸ்ட்.. வெறும் பில்டப் தான்.. தேவரா ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வசூலில் வெறித்தனமாக வேட்டையாடிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

கொரட்டலா சிவா இயக்கத்தில் டோலிவுட் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பான் இந்தியா படமாக தேவரா உருவாகியுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் ஒரு கேங்ஸ்டரை பிடிக்கும் கதையில் படம் தொடங்குகிறது. ஆனால், அதன் பின்னர் அந்த கதையை விட்டு விட்டு ஜூனியர் என்டிஆர் யாரு தெரியுமா? என பிரகாஷ் ராஜின் பில்டப்புடன் இன்னொரு ஃபிளாஷ் பேக் கதை ஆரம்பிக்கிறது.

blue sattai maran devara review

மலைவாழ் மக்கள் ஏன் மீன் பிடிக்க வேண்டும் என்கிற அளவுக்கு லாஜிக் இடிக்குற விதத்தில் தான் படத்தை உருவாக்கி வைத்துள்ளனர் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் வெளுத்து வாங்கியுள்ளார்.

ஜூனியர் என்டிஆர் படம்: டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர், பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், தேவரா படத்தில் மலையாள நடிகர் டைம் ஷைன் சாக்கோ, பிரகாஷ் ராஜ், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 27ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் படத்தை கழுவி ஊற்றியுள்ளார்.

தேவரா ப்ளூ சட்டை விமர்சனம்: ஆக்‌ஷன் படங்கள் என்றாலே வில்லன் கதாபாத்திரம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். ஆனால், சைஃப் அலி கான் ஆரம்பத்திலேயே ஜூனியர் என்டிஆரிடம் செமத்தியாக அடி வாங்குகிறார். அவர் படத்தில் நண்பன் கதாபாத்திரமா? வில்லன் கதாபாத்திரமா? என்ன ரோல் என்பதே புரியாத புதிராக குழப்பமான மனநிலையிலேயே அவரது கதாபாத்திரத்தை இயக்குநர் உருவாக்கியுள்ளார். ஜான்வி கபூர் இந்த படத்தில் தேவை இல்லாத அணி கேரக்டர் தான். அவருக்குப் படத்தில் பெரிதாக எந்தவொரு ஸ்கோப்பும் இல்லை என ப்ளூ சட்டை மாறன் தேவரா படத்தை வெளுத்து வாங்கியுள்ளார்.

blue sattai maran devara review

வெத்து பில்டப்: மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மற்றொரு வெத்து பில்டப் படம் தான் தேவரா. இந்தியாவுக்கு எதிராக ஆயுதங்களை கடத்தி வரும் அந்நியர்களுக்கு உதவி செய்யக் கூடாது என நினைத்து கடற்கொள்ளையனாக இனிமேல் இருக்கக் கூடாது என ஜூனியர் என்டிஆர் நினைக்கிறார். அதற்காக அவரை போட்டுத் தள்ள வேண்டும் என மற்ற ஊர் மக்கள் துடிக்க கடைசியில் யாரை காப்பாற்றினார், யாருடன் சண்டைப் போட்டார் தேவரா என்பது தான் படத்தின் கதை என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

கன்ஃபியூஸ் ஆகிட்டாரு: ஒரு கட்டத்துக்கு மேல் தேவரா படத்தின் விமர்சனம் பற்றி இப்போ நான் என்ன சொல்றது என்கிற நிலைமையில் ப்ளூ சட்டை மாறனே குழம்பிப் போய் ஏதேதோ கதைகளை சொல்லும் அளவுக்கு அவரையே படம் அந்தளவுக்கு குழப்பி விட்டுள்ளது என நெட்டிசன்கள் அவரது வீடியோவுக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர். ஸ்டார் நடிகர்களுக்கு தீனிப்போடும் கதைகளை கொடுக்க இயக்குநர்கள் திணறி வருவது தான் இத்தனை சொதப்பல்களுக்கும் காரணம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X