ஆரஞ்சு பழத்துக்கு ஆரஞ்சு கலர் அடிச்சாத்தான் தெரியுமா?.. ரஜினியை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: லால் சலாம் படத்திற்கு கலவையான விமர்சனங்களை பல விமர்சகர்கள் கொடுத்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்திருந்தார். மேலும், விமர்சனத்தை தாண்டி ரஜினிகாந்தை டைரக்ட்டாகவே தாக்கி அவர் கடுமையாக பேசியுள்ளது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது.
எங்கப்பாவை சங்கி என விமர்சனம் செய்யுறாங்க, அவர் சங்கி இல்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் இசை வெளியீட்டு விழா மேடையில் வருத்தமாக பேசியிருந்தார். ஆனால், அடுத்த நாளே சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை என விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் அளித்திருந்தார்.

நெகட்டிவ் விமர்சனம்: லால் சலாம் படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் ஒட்டுமொத்தமாகவே நெகட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார். படத்தில் சூப்பர் என சொல்ற அளவுக்கு ஒரு சீனை கூட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவில்லை என்றும் ஆரம்பத்தில் இருந்து கிளைமேக்ஸ் வரை அரத பழசான காட்சிகளை வைத்து அடுக்கி இருக்கிறார். எதிலும் தெளிவே இல்லை என போட்டு பொளந்துள்ளார்.
ஆரஞ்சு பழத்துக்கு ஆரஞ்சு கலர்: லால் சலாம் படத்தின் விமர்சனத்தை முடித்து விட்டு சில நிமிடங்களுக்கு ரஜினிகாந்தை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியிருந்தார். ரஜினிகாந்த் சங்கி இல்லை என அவருடைய மகள் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரொம்பவே ஃபீல் பண்ணி பேசினார். ஆனால், ஆரஞ்சு பழத்துக்கு ஆரஞ்சு கலர் அடித்தால் தான் அது ஆரஞ்சு பழம் என தெரியுமா? அப்படியே தெரியுது ரஜினிகாந்த் சங்கி என்று தான் என ப்ளூ சட்டை மாறன் வெளிப்படையாக விமர்சித்து பேசியிருப்பது ரஜினிகாந்த் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.
திட்டும் ரசிகர்கள்: லால் சலாம் படத்தின் மீது விமர்சனம் இருந்தால் அதை சொல்லுங்கள். அதை விட்டு விட்டு ரஜினிகாந்தை சங்கி என விமர்சிப்பது தேவையில்லாத ஒன்று என ரஜினிகாந்த் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை மோசமான வார்த்தைகளை போட்டு திட்டி வருகின்றனர். இந்த ஆண்டு வெளியான படங்களை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் ப்ளூ சட்டை மாறன் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்கு மட்டும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











