வேட்டையன் நடிகைகள் ரஜினிகாந்திடம் இருந்து உஷாரா இருங்க.. ப்ளூ சட்டை மாறன் போட்ட பகீர் ட்வீட்!
சென்னை: அருணாச்சலம் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் எவ்வளவு ஜாலியாக தன்னிடம் ஃபன் செய்தார் என சமீபத்திய பேட்டியில் ரம்பா பேசியது விஜய் ரசிகர்கள் வசம் தொக்காக சிக்கி விட்டது. அருணாச்சலம் படப்பிடிப்பில் ரம்பாவிடம் ரஜினிகாந்த் அத்துமீறியதாக ஹேஷ்டேக் எல்லாம் டிரெண்ட் செய்து சோஷியல் மீடியா சண்டையை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் அதே விவகாரத்தை வைத்து தற்போது ட்வீட் போட்டு ரஜினிகாந்தை கலாய்த்துள்ளார்.
அஜித் குமார், ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சண்டை போட ஆரம்பித்துள்ளனர். அந்த நடிகர்களின் படங்கள் வரவில்லை என்றாலும் அவர்கள் பற்றிய செய்திகள் வந்தாலே சோஷியல் மீடியா பற்றிக் கொள்கிறது. சமீபத்தில் துபாயில் அஜித் குமார் ஆட்டம் போட்டு கொண்டாடியது மற்றும் ரசிகர்களின் செல்போனை வாங்கி வீடியோக்களை டெலிட் பண்ணது சர்ச்சையை கிளப்பியது.

ரம்பா பேட்டி: அதே போல ரஜினிகாந்த் பற்றி ரம்பா பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது. வலைப்பேச்சு அந்தணன் எல்லாம் மீடூ விவகாரம் அளவுக்கு டைட்டில் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். நடிகை ரம்பா அளித்த பேட்டியில் சுந்தர். சி இயக்கத்தில் ரஜினிகாந்த் உடன் அவர் நடித்த அருணாச்சலம் படத்தின் சூட்டிங் சமயத்தில் சல்மான் கானை பார்த்ததும் ஓடிப் போய் கட்டிப்பிடித்து வணக்கம் செலுத்தியதை ரஜினிகாந்த் கிண்டல் செய்தார் என்றும் மேலும், ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் திடீரென லைட் ஆஃப் ஆன சமயத்தில் யாரோ ஒருவர் என் முதுகில் தட்டிவிட்டு சென்றதும் கதறி விட்டேன். உடனே லைட்டை போட்டு ரஜினிகாந்த் பண்ண கலாட்டா டிராமாவை பேசியிருந்தார். சந்திரமுகி ஷூட்டிங் சமயத்தில் ஜோதிகாவிடமும் ரஜினிகாந்த் பிராங்க் செய்தது குறித்து அவரும் குறிப்பிட்ட்டு இருந்தார்.

வேட்டையன் நடிகைகள் உஷார்: "வேட்டையன் படப்பிடிப்பில் தலீவருடன் காம்பினேஷன் காட்சிகளில் நடிக்கும்போது தங்கு தடையற்ற மின்சாரம் வழங்குமாறு முன்னணி மற்றும் துணை நடிகைகள் கோரிக்கை வைக்கவுள்ளதாக தகவல்." என தற்போது ப்ளூ சட்டை மாறன் புதிய ட்வீட் போட்டு பகீர் கிளப்பி உள்ளார். மேலும், கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வராமல் தற்போது அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தும் நடிகர்களை டிராமா பண்ணுகின்றனர் என ட்ரோல் செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











