தம்பி இதுதான் உங்க டக்கா.. சிவகார்த்திகேயனை வம்பு இழுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: இயக்குநர் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியாக இருந்த ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்களும் தவெக தொண்டர்களும் கவலையில் இருக்கும் நிலையில், ப்ளூ சட்டை மாறன், சிவகார்த்திகேயனை வம்பு இழுத்து ட்வீட் போட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது.

ஜனநாயகன்: இப்படத்தின் ஜனவரி 9-ம் தேதி எல்லாரும் 'ஜனநாயகன்' படத்தை கொண்டாடுங்க. 33 வருஷம் நம்மை எல்லோரையும் என்டர்டெயின் பண்ண ஒருத்தரோட கடைசிப் படம். கண்டிப்பா எல்லோரும் கொண்டாடனும். ஜனவரி 10-ம் தேதி 'பராசக்தி' படம் வருது, அதையும் செலிப்ரேட் பண்ணுங்க. எவன் என்ன வேணா சொல்லட்டும், இந்த பொங்கல் அண்ணன்-தம்பி பொங்கல்.மேலும், விஜய்யிடம் அனுமதி வாங்கித்தான் பராசக்தி படத்தை வெளியிடுவதாக கூறினார்.
பராசக்தி: ஆனால், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ் தர தாமதமானதால், படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை இன்று அறிவிப்பதாக கூறினார். தீர்ப்பு வழங்க தாமதமாகும் என்பதால் படக்குழு படத்தின் ரிலீசை ஒத்திவைத்தது. இதனால், ரசிகர்களும் தவெக தொண்டர்களும் கவலை அடைந்தனர். பல பிரபலங்கள் இதை கண்டித்து வரும் நிலையில், நடிகர் ரவி மோகன் தனது எக்ஸ் தளத்தில், மனம் உடைந்துவிட்டேன் விஜய் அண்ணா, உங்கள் பக்கம் இருக்கும் கோடி தம்பிகளில் ஒருவனாக நானும் நிற்கிறேன். உங்களுக்கு தேதி எல்லாம் தேவையில்லை. நீங்கள் தான் ஓபனீங், ரிலீஸ் எப்போ எந்த தேதியாக இருந்தாலும், எங்களுக்கு பொங்கல் அப்போது தான் தொடங்கும் பதிவிட்டு இருந்தார்.
ப்ளூ சட்டை மாறன்: ரவி மோகனின் இந்த பதிவினை தனது எக்ஸ் தளபக்கத்தில் ஷேர் செய்து, இந்த பொங்கல் அண்ணன் தம்பி பொங்கல் என பாசத்தை பொழிந்த திடீர் தளபதி பலத்த மௌனம். இதுதான் அண்ணன் மேல நீ வச்சிருக்கற அன்பா தம்பி? ஏதாச்சும் பேசு ராசா. பயப்படாத. நீதான் தைரியமான ஆளாச்சே என பதிவிட்டு சிவகார்த்திகேயனை வம்புக்கு இழுத்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள இணையவாசி ஒருவர், முதலில் விஜய்யை பேச சொல்லுங்கப்பா, அடி வாங்குவனவன் தான் கத்தனும் சும்மா போறவன் எதுக்குயா கத்தனும் என கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











