Blue Sattai Maran: கொலை மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை.. ரஜினி ரசிகர்கள் மீது ப்ளூ சட்டை மாறன் புகார்!
சென்னை: ஜெயிலர் படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அந்த படம் குறித்தும் ரஜினிகாந்த் குறித்தும் தொடர்ந்து நெகட்டிவ் ட்வீட்களை பதிவிட்டு வரும் ப்ளூ சட்டை மாறனுக்கு ரஜினி ரசிகர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி மாயாஜால் தியேட்டரில் ஈவ்னிங் ஷோ பார்க்கிறேன். தில்லுருந்தா அங்க வந்து அடி என நேற்று ரஜினி ரசிகர் ஒருவருக்கு ப்ளூ சட்டை மாறன் சவால் விட்டிருந்தார்.

இதனால், கடுப்பான ரஜினிகாந்த் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை பார்த்தால் அடித்து நொறுக்கி விடலாம் என ட்விட்டர் ஸ்பேஸ் போட்டு பேசிய ஆடியோவை வெளியிட்டு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் இப்படி கொலை மிரட்டல் விடுக்கலாமா எனக் கேட்டுள்ளார்.
ரஜினிகாந்தை சீண்டி: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சூப் ஸ்டார் என்றும் பருந்து என்றும் அவரது ரசிகர்களை பருந்து குஞ்சுகள் என்றும் ரஜினிகாந்தை காக்காகாந்த் என்றும் எல்லை மீறி அவதூறாக பேசி வந்த ப்ளூ சட்டை மாறனை தொடர்ந்து கமெண்ட் பக்கத்தில் அசிங்க அசிங்கமாக ரஜினி ரசிகர்கள் திட்டி வருகின்றனர். ஆனால், அதற்கு எல்லாம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்த ப்ளூ சட்டை மாறன் தற்போது ரஜினிகாந்த் ரசிகர்கள் மீது கொலை மிரட்டல் புகார் ஒன்றையும் கொடுத்திருக்கிறார்.
நெகட்டிவ் ரிவ்யூ சொன்னால் அடி: ஜெயிலர் படத்தை பார்த்து விட்டு யாராவது தியேட்டரில் நெகட்டிவ் ரிவ்யூ சொன்னால் அங்கேயே பின் மண்டையில் அடித்து நொறுக்கி விடுங்கள் என ரஜினி ரசிகர்கள் சிலர் நடத்திய ட்விட்டர் ஸ்பேஸ் ஆடியோவை தற்போது வெளியிட்டு தனக்கு இதே க்ரூப் தான் கொலை மிரட்டல் விடுத்துள்ளது என ப்ளூ சட்டை மாறன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
கொலை மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்: "பொதுத்தளத்தில் தொடர் கொலை மிரட்டல் விடும் இந்த நபரையும், இக்குறிப்பிட்ட ட்விட்டர் ஸ்பேசஸ் - ஐ நடத்தும் அட்மின்களையும் உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறேன்.
இப்படியான கொலை மிரட்டலுக்கு துளியும் அஞ்சப்போவதில்லை. தர்க்கபூர்வமான கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படும். முடிந்தால் அதற்கு ஜனநாயக முறைப்படி எதிர்வினையாற்றுங்கள்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்களே, நீங்கள் இதற்கு நிச்சயம் ரியாக்ட் செய்ய வாய்ப்பில்லை. ஒருவேளை இவர்கள் உங்கள் சொல்லை கேட்பார்கள் என நம்பினால் கண்டியுங்கள். இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள்.
தமிழக அரசு, காவல்துறை மற்றும் ரஜினி ரசிகர்கள் அல்லாத பொதுமக்களுக்கு எது நியாயம் என்று தெரியும். அதுவே எனக்கு போதுமானது.
ஒருவேளை வன்முறை தாக்குதல் நடத்தினாலும் சட்டப்படி காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்.
சூப்பர் ஹீரோக்களின் அடிப்பொடிகளுக்கு அஞ்சாமல் எனது ட்வீட்கள் தொடரும்." என ப்ளூ சட்டை மாறன் தற்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











