எல்லாரும் வச்சு செய்ய ரெடியா.. ப்ளூசட்டை மாறனின் முதல் படம் ஷூட்டிங் ஓவராம்!

சென்னை: வார வாரம் வரும் கோலிவுட் படங்களை விமர்சனம் என்கிற பெயரில் வச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறனின் முதல் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ப்ளூசட்டை மாறன் இயக்கியுள்ள புதிய படத்தின் ஷூட்டிங் நேற்று (டிசம்பர் 21) நிறைவடைந்துள்ளது.

இந்த தகவலை ப்ளூசட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ப்ளூசட்டை மாறனால் பாதிக்கப்பட்ட பல நடிகர்களின் ரசிகர்கள், படம் வரட்டும் வச்சு செய்கிறோம் என கழுவி ஊற்றி வருகின்றனர்.

டிரெண்டிங் விமர்சகர்

டிரெண்டிங் விமர்சகர்

காலையில் முதல் காட்சியை பார்த்துவிட்டு அடித்து பிடித்து விமர்சகர் எனும் பெயரில் பல யூடியூபர்கள் விமர்சனங்களை கொடுத்து வந்தாலும், லேட்டா சாவகாசமா படத்தை பார்த்துவிட்டு, நள்ளிரவு அல்லத்து அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு விமர்சனம் போடும் ப்ளூசட்டை மாறனின் விமர்சனம் யூடியூப் டிரெண்டிங்கில் டாப் இடத்தை பிடித்துவிடும்.

மரண கலாய்

மரண கலாய்

வெள்ளிக்கிழமை ரிலீசாகும் படங்களில் கொஞ்சம் லாஜிக் மிஸ்டேக் இருந்து விடக் கூடாது, தலைவர் வச்சி செய்து மரண கலாய் கலாய்த்து விடுவார்.

சூப்பர் ஹீரோவுக்கு வந்த சோதனை

சூப்பர் ஹீரோவுக்கு வந்த சோதனை

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான ஹீரோ படமும் இவரது விமர்சனத்துக்கு தப்பவில்லை. படத்தை கழுவி கழுவி ஊற்றியுள்ளார். என்னடா இது சூப்பர் ஹீரோவுக்கு வந்த சோதனை என பஞ்ச் பேசியும் கலாய்த்துள்ளார்.

முதல் படம்

முதல் படம்

தமிழ் சினிமாவில் லூசு ஹீரோயின் இல்லாமல், லாஜிக் ஓட்டைகள் இல்லாமல், மொக்கை வில்லன் இல்லாமல், அரைத்த மாவையே அரைக்காமல், ப்ளூசட்டை மாறன் எப்படி அவரது படத்தை எடுத்துள்ளார் என்பதை காணவும் படம் எப்படி வந்தாலும், அதனை கழுவி ஊற்றவும் ஒரு பெருங்கூட்டமே காத்திருக்கிறது.

ஷூட்டிங் ஓவர்

வி ஹவுஸ் புரொடக்‌ஷன் தயாரிப்பில் ப்ளூசட்டை மாறன் இயக்கியுள்ள புதிய படத்தின் ஷூட்டிங் கடந்த செப்டம்பர் 13ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. மூன்றே மாதங்களில் படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இதுவரை படத்தின் பெயர், நடிகர்கள் குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

தமிழ் தற்கொலை

நேற்று முதல் படப்பிடிப்பு நிறைவு பெற்றது என ப்ளூசட்டை மாறன் போட்ட பதிவையே நெட்டிசன்கள் கழுவி ஊற்ற தொடங்கி விட்டனர். நேற்று முதலா.. ஆரம்பமா? முடிவா? தமிழ் தற்கொலை செய்யப்பட்டது என இந்த நெட்டிசன் ட்ரோல் செய்துள்ளார்.

நீங்க ரிவ்யூ பண்ணுவீங்களா

தலைவா எனக்கு ஒரு டவுட்டு.. உங்க படம் ரிலீஸ் ஆனா நீங்க ரிவ்யூ பண்ணுவீங்களா என இந்த நெட்டிசன் கலாய்த்துள்ளார்.

ரிலீஸ் பண்ணு டி

ரிலீஸ் பண்ணு டி என படத்தின் ரிலீசுக்காக கொலை காண்டில் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தல – தளபதி ஃபேன்ஸ்

ப்ளூசட்டை மாறன் படம் ரிலீசானால், அதனை கழுவி ஊற்றி ட்ரோல் செய்து, மரண சம்பவம் செய்ய தல - தளபதி ஃபேன்ஸ் ஒன்று சேர்வார்கள் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X