Blue Sattai Maran OG Review: ஹைதர் அலி காலத்து கதை.. ஆனால்? ப்ளூ சட்டை மாறனின் ஓஜி விமர்சனம்!

சென்னை: பவன் கல்யாண் படங்கள் என்றாலே ஏதாவது "சங்கீத்தனம்" பண்ணி வைத்திருப்பார், பார்க்க தமாசாக இருக்கும் என்று நினைத்து சென்றால், ஏமாற்றமே மிஞ்சும் என்று 'தே கால் ஹிம் ஓஜி' படம் பார்த்த அனுபவத்தை கூறி ஆரம்பிக்கிறார் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.

பொதுவாகவே தமிழில் வெளியாகும் கமர்ஷியல் படங்களை கழுவி ஊற்றி வரும் ப்ளூ சட்டை மாறன் எதிர்பாரா விதமாக இந்த படத்தை பாராட்டி ஏகப்பட்ட பாசிட்டிவ் கருத்துக்களுடன் விமர்சனத்தை கொடுத்திருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

Blue Sattai Maran gives a sarcastic positive review to Pawan Kalyan s OG Review
Photo Credit:

ரஜினிகாந்தின் கூலி படத்தை எல்லாம் அடித்து துவம்சம் பண்ண ப்ளூ சட்டை மாறன் லம்ப்பா பணம் வாங்கிக் கொண்டு இந்த விமர்சனத்தை கொடுத்துள்ளாரா? அல்லது உண்மையாகவே படம் அவ்வளவு நல்லா இருக்கா என ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

ப்ளூ சட்டை மாறனின் ஓஜி விமர்சனம்: இயக்குநர் சுஜித் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'தே கால் ஹிம் ஓஜி' திரைப்படம், இந்திய சினிமாவில் பல லட்சம் முறை பார்த்து சலித்த ஹைதர் அலி காலத்து கதையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், அதை சுவாரஸ்யமாகக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் ஊரையே அதிர வைத்த ரவுடி, தற்போது அடக்க ஒடுக்கமாக வாழ்ந்து வருகிறார்.

சிங்கத்தை சீண்டிப் பார்த்தால் என்ன நடக்கும் என்கிற டெம்ப்ளேட் கதைதான். லாஜிக் இல்லாத கதையை எப்படி மேஜிக் செய்து இயக்குநர் நிலை நிறுத்தியிருக்கிறார் என்பதே படத்தின் திரைக்கதை.இது பவன் கல்யாண் படமாக இருந்தாலும், முழுக்க முழுக்க இயக்குநரின் படம் என்றே சொல்லலாம். ஹீரோவுக்கான பில்டப் வசனங்கள், காட்சிகள், சூழ்நிலைகளை உருவாக்கி, அதற்குள் கதையை பொருத்தி இருக்கிறார் இயக்குநர்.

பாசிட்டிவ் விமர்சனம்: படப்பிடிப்பில் இருந்தவர்களுக்கு இது படமாகத் தெரியாது. எடிட்டிங்கில் தான் முழு வடிவம் கிடைத்தது என்கிறார்.படத்தை ரசிக்க இரண்டு முக்கிய காரணங்கள்: டெக்னிக்கல் டீம் மற்றும் ஹீரோவின் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம். மனோஜ் பரமஹம்சா மற்றும் ரவி கே.சந்திரன் ஆகியோரின் ஒளிப்பதிவு பிரமாதமாக இருந்தது. தமன் பின்னணி இசை படத்திற்கு வேகம் கூட்டுகிறது. சண்டைக் காட்சிகளும் வித்தியாசமாக இருந்தன.ஹீரோ எத்தனை பேரை வேண்டுமானாலும் அடிப்பார் என்ற நம்பகத்தன்மை பொருத்தமாக இருந்தது.

ஜப்பான் எபிசோடிற்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. அது இரண்டாம் பாகத்தில் வரும் என்று கூறுகிறார்கள். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.அர்ஜுன் தாஸின் கதாபாத்திரம் ஹீரோவுக்கு துரோகம் செய்வது போல் அமைக்கப்பட்டிருந்தது. அவருக்கு ஒரு பிளாஷ்பேக் காட்சியும் இருந்தது, அது வித்தியாசமாக இருந்தது. ஹீரோவுக்கு இருந்த பில்டப் அளவிற்கு வில்லன் கதாபாத்திரம் வலுவாக இல்லை.

கலாய்க்கிறாரா?: முதல் பாதி கதையை நகர்த்தியது. இரண்டாம் பாதியில் சில நல்ல காட்சிகள் இருந்தன. குறிப்பாக போலீஸ் ஸ்டேஷன் காட்சி ரசிக்கும்படி இருந்தது. பவன் கல்யாண் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு முழுமையான விருந்தாக இருக்கும்.மொத்தத்தில், மூளையை கழற்றி வைத்துவிட்டுப் பார்த்தால், ஏற்கனவே பார்த்து சலித்த கதையாக இருந்தாலும், வித்தியாசமான திரைக்கதை அனுபவத்தை இப்படம் கொடுக்கும். பவன் கல்யாண் படம் என்பதால் ஏதாவது சுவாரஸ்யம் இருக்கும் என எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றமே மிஞ்சும் என்கிறார் ப்ளூ சட்டை மாறன். இதன் மூலம் படம் நல்லா இருக்கு என்கிறாரா? அல்லது ட்ரோல் செய்கிறாரா என ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X