RSS! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இப்படி ஒரு அர்த்தமா? அச்சச்சோ ப்ளூ சட்டை மாறன் விடமாட்டாரு போலயே

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை எப்போதும் வம்பிழுத்து வருபவர் சினிமா விமர்சகர் மற்றும் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன். இவரது எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்த் குறித்து குறிப்பிடும்போது எல்லாம், தலீவர் என்று வம்பாகவே குறிப்பிட்டு வருகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரைக் குறிப்பிட்டு அவரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இறை நம்பிக்கை உடையவர். குறிப்பாக இவர் ராகவேந்திரா மற்றும் சிவன் மீது அளவற்ற பக்தி கொண்டவராக உள்ளார். ஆனால், ரஜினிகாந்த்தை ஆர்.எஸ். எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் என்று ப்ளூ சட்டை மாறன் தெரிவிப்பதற்கு முன்னரே, ரஜினிகாந்த் மீது இது போன்ற விமர்சனங்கள் பலமுறை வந்துள்ளது. அதற்கு காரணம் அவரது சில பேச்சுகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் அவரது பதில்களைக் குறிப்பிடலாம்.

ஒருமுறை துக்ளக் விழாவில் பேசுகையில், முரசொலி படிக்கிறவர்கள் திமுகவினர் என்றும் துக்ளக் படிக்கிறவர்கள் அறிவாளிகள் என்றும் குறிப்பிட்டு பேசியிருந்தார். அதேபோல் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த பின்னர், செய்தியாளர்களை சந்திக்கையில், "எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும், சமூக விரோதிகளே இதற்கு காரணம்" என்று தெரிவித்தார். இவரது இதுபோன்ற நடவடிக்கைகள்தான் இவரை பாஜகவைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்ற விமர்சனத்திற்கு ஆளாக்கியது.

Blue Sattai Maran Gives Controversy Explanations TO Superstar Rajinikanth Name With RSS

கடந்த ஆண்டில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அந்த படத்தின் இயக்குநரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளுமாகிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசுகையில், எனது அப்பா சங்கி இல்லை. அவர் சங்கி என்றால் இந்த படத்தில் நடித்திருக்க மாட்டார் என்று பேசினார். ப்ளூ சட்டை மாறன் இப்போது திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் சேர்த்து விமர்சிக்க காரணம், அண்மையில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைதான்.

இது தொடர்பாக அவர் ஏற்கனவே விமர்சிக்கையில், " நெத்திலி மீன்களை துரத்தும் ரெய்டுகள்.. திமிங்கிலங்களை பிடிக்காதது ஏன்? திடீரென 400 கோடிக்கும் மேல் சினிமாவில் முதலீடு செய்யும் அளவிற்கு ஆகாஷ் பாஸ்கரனுக்கு எங்கிருந்து பணம் வந்தது? ரெய்டில் இருந்து தப்பி ஓடிய ரத்தீஷ் எனும் தம்பி.. யார்? மேலும் சில கேள்விகள்: பலகோடி வருமானம் ஈட்டிய‌Kerala Story பட நிறுவனம் மீது ரெய்டு நடந்ததா? பிரதமர் வாழ்த்து சொன்ன kashmir Files படம் 300 கோடிக்கு வசூல் என கூறப்பட்டதே? அந்த தயாரிப்பாளர் ரெய்டு செய்யப்பட்டாரா?சமீபத்தில் வெளியான chaava படத்தை பிரதமர் புகழ்ந்து தள்ளினாரே. அப்படம் 800 கோடி வசூலித்ததே. அந்நிறுவனத்தை ரெய்டு செய்தார்களா?ஏகப்பட்ட தேசப்பற்று படங்களில் நடித்த அக்சய் குமார், கங்கனா ரனவத் வீடுகளுக்கு‌ ED போக மாட்டார்களா?

Blue Sattai Maran Gives Controversy Explanations TO Superstar Rajinikanth Name With RSS

தலீவர் ( ரஜினிகாந்த்) வீட்டில் இதுவரை ஏன் ரெய்டு போகவில்லை? டைம்ஸ் நவ் சேனலில் நெறியாளராக இருந்த அர்னாப் கோஸ்வாமிக்கு ரிபப்ளிக் டிவி சேனல் தொடங்கும் அளவுக்கு பலகோடி பணம் வந்தது எப்படி? மத்தியில் பாஜக ஆட்சி வந்த பிறகு அமித் ஷா மகன் ஜெய் ஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு மடங்கு அதிகமானது? இந்த அனைத்து கேள்விகளையும் முன்வைத்து தானே விவாதம் செய்யப்பட வேண்டும்?" என பதிவிட்டிருந்தார்.

Blue Sattai Maran Gives Controversy Explanations TO Superstar Rajinikanth Name With RSS

இது மட்டும் இல்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயர் குறித்து அவர் தெரிவித்துள்ள புதிய விளக்கம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " 'உங்க வீட்டுக்கு ரெய்டு வர மாட்டாங்களா தலைவா?'

மாட்டாங்க'

'ஏன்?'

என் பேரென்ன?'

'Rajini'

'அடைமொழியோடு சேத்து சொன்னா?'

'Super Star Rajini'

'சுருக்கமா சொன்னா?'

'SSR'

'திருப்பி போட்டா?" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பலமுறை திமுக மேடைகளிலும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X