வித்தையே காட்டாத வித்தைக்காரன்.. இது டார்க் காமெடி இல்லை டெத் ஸ்லோ.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: காமெடி நடிகர்கள் எல்லாம் ஹீரோவாகி ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள் என்று பார்த்தால் தலைவலியைத் தான் கொடுக்கின்றனர் என ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை வித்தைக்காரன் படத்தை பார்த்து விட்டு கழுவி ஊற்றி வருகின்றனர். இயக்குநர் வெங்கி இயக்கத்தில் சதீஷ், சிம்ரன் குப்தா நடிப்பில் பிப்ரவரி 23ம் தேதி வித்தைக்காரன் திரைப்படம் வெளியானது.
மெர்சல் மற்றும் அயன் படங்களின் பாதிப்பால் ஒரு படம் உருவானது போல வித்தைக்காரன் உருவாகி இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் வித்தைக்காரன் படம் வித்தையே காட்டவில்லை என போட்டு பொளந்திருக்கிறார்.

வித்தைக்காரன் விமர்சனம்: வெங்கி இயக்கத்தில் சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்த்ராஜ், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான வித்தைக்காரன் படத்தில் மேஜிக் செய்யும் நபராக சதீஷ் நடித்திருக்கிறார். படத்தின் டைட்டிலே அதற்காகத்தான் வித்தைக்காரன் என வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், உருப்படியா குழந்தைகள் ரசிக்கும்படி கூட படத்தில் ஒரு வித்தையையும் காட்டவில்லை சதீஷ் என ஆரம்பத்திலேயே படத்தின் டைட்டிலையே டோட்டல் டேமேஜ் செய்து விட்டார் ப்ளூ சட்டை மாறன்.
டார்க் காமெடி இல்லை: நெல்சன் இயக்கத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் படங்கள் எல்லாம் டார்க் காமெடி படங்களகா வெளியான நிலையில், அதே ட்ரீட்மென்ட்டில் சதீஷை வைத்து ஒரு டார்க் காமெடி படத்தை கொடுக்க இயக்குநர் நினைத்திருக்கிறார். ஆனால், ஒரு காமெடி கூட வொர்க்கவுட் இல்லை. இது டார்க் காமெடி படம் இல்லை டெத் ஸ்லோ படம் என சோலியை முடித்துவிட்டார் ப்ளூ சட்டை மாறன்.
ஒரு சீனை வச்சு செகண்ட் ஹாஃப்: முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் தான் கதை நகர்கிறது. அதிலும், 25 கோடி மதிப்புள்ள வைரத்தை விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் இருந்து மீட்க வேண்டும். இது ஒரு சீன். ஆனால், இதை வைத்து இரண்டாம் பாதி முழுவதுமே ஓட்டியிருப்பது ரசிகர்களை போரடிக்க வைக்கிறது. வித்தைக்காரன் படத்தை பார்க்க வேண்டும் என்றால் மூளையை கழட்டி வைத்து விட்டுப் போங்க என விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications