Blue Sattai Maran Amaran Review: எஸ்கே மீது வன்மத்தை கொட்டிய ப்ளூ சட்டை மாறன்.. அமரன் விமர்சனம்!
சென்னை: சிவகார்த்திகேயனின் அமரன் படத்திற்கு முடிந்தளவுக்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ள ப்ளூ சட்டை மாறன் படத்திற்கு சம்பந்தமில்லாத சர்ச்சை விஷயம் குறித்து பேசியிருப்பதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு வன்மம் கூடாது என ப்ளூ சட்டை மாறனை கண்டித்து வருகின்றனர்.
பர்சனல் வாழ்க்கை குறித்த ஏகப்பட்ட கிசுகிசுக்களில் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பல நடிகர்கள் சிக்கினாலும் ரசிகர்கள் அவர்களின் படங்களை படங்களாகவே பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இன்னமும் இமான் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே நடைபெற்ற பஞ்சாயத்தை மனதில் வைத்துக் கொண்டே இந்த செவ்வாய்க்கிழமை சிவகார்த்திகேயன் செத்துடுவாரா என ரசிகர் ஒருவர் போட்ட கமெண்ட்டை மேற்கோள் காட்டி விமர்சனத்தில் பேசியிருப்பது கொஞ்சமும் சரி கிடையாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திடீர் தளபதி: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் ஏகப்பட்ட சொதப்பல்கள் உள்ளதாகவும் திடீர் தளபதி சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக மாறி முடிந்த வரை நல்லா நடிக்க முயற்சித்துள்ளார். ஆனால், ராணுவம் சார்ந்த விஷயத்தில் எந்தவொரு டீட்டெய்லிங்கும் பெரிதாக இல்லை என்றும் இது முழுக்க முழுக்க உண்மைக் கதை கிடையாது. சினிமாவுக்காக ஏகப்பட்ட மசாலாக்களை இயக்குநர் சேர்த்திருக்கிறார் என விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
சாய் பல்லவி தான் காப்பாற்றினார்: 50 சதவீதம் மட்டுமே நல்லா இருக்கும் இந்த படத்தை 100 சதவீதமாக மாற்றியிருப்பது சாய் பல்லவி தான் என்றும் அவர் இல்லையென்றால் அமரன் படம் அம்போ தான் என ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்துக்கு நடுவே சாய் பல்லவிக்கு உண்டான பாராட்டுக்களை கொடுத்துள்ளார்.
பாசிட்டிவ் விமர்சனம்: சிவகார்த்திகேயன் படத்துக்கு ப்ளூ சட்டை மாறனிடம் இருந்து இந்தளவுக்கு ஒரு பாசிட்டிவ் விமர்சனம் வந்ததே பெரிய விஷயம் தான் என்றும் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் சின்ன பகவதி என்றும் திடீர் தளபதி என்றும் சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்து வரும் ப்ளூ சட்டை மாறனே படத்தை பாராட்டி விட்டாரே என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
வன்மத்தை கக்கிட்டாரு: படத்தின் விமர்சனத்தை தாண்டி சிவகார்த்திகேயன் குறித்த தனிப்பட்ட கருத்துக்களையும் செவ்வாய்க்கிழமை படத்துடன் ஒப்பிட்டு அந்த படத்தில் கள்ள உறவு வைத்துக் கொள்பவர்கள் பலியாகி வரும் நிலையில், அதே போல சிவகார்த்திகேயனுக்கு நடக்குமா? என ரசிகர் ஒருவர் போட்ட கமெண்ட்டை குறிப்பிட்டு இதெல்லாம் தப்புடா தம்பி என ப்ளூ சட்டை மாறன் பேசியிருப்பது முழுக்க முழுக்க வன்மம் மட்டுமே காரணம் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கண்டித்து வருகின்றனர்.
படம் பிளாக்பஸ்டர்: ப்ளூ சட்டை மாறன் என்ன கதறினாலும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் பிளாக்பஸ்டர் தான் என்றும் உண்மையை கதையை உங்க இஷ்டத்துக்கு மாற்ற முடியாது மிஸ்டர் மாறன் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் அவரது யூடியூப் விமர்சன வீடியோவுக்கு கீழ் குவிந்து வருகிறது. அமரன் படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவாக பேசிய போர்ஷனையும் சாய் பல்லவியின் நடிப்பை பாராட்டியதையும் கட் செய்து சோஷியல் மீடியாவில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











