The Village Review: ஓடிடி பக்கம் ஒதுங்கிய ஆர்யா.. தி வில்லேஜ் வெப்சீரிஸ் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: சித்தார்த் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான அவள், நயன்தாரா நடித்த நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள ஆர்யாவின் தி வில்லேஜ் வெப்சீரிஸ் குறித்த விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளார்.

முதல் எபிசோடு நன்றாக தொடங்கிய நிலையில், அடுத்த 5 எபிசோடுகளும் சும்மா ஜவ்வு மிட்டாய் போல ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வந்து சோதித்து விட்டது என விளாசி உள்ளார்.

Blue Sattai Maran gives negative review to Aryas The Village web series

சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ஆர்யாவுக்கு எந்தவொரு வெற்றிப் படமும் அமையவில்லை. ஓடிடி பக்கம் ஒதுங்கியவருக்கும் அங்கேயும் எதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை என விமர்சித்துள்ளார்.

தி வில்லேஜ் வெப்சீரிஸ்: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 24ம் தேதி மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்த தி வில்லெஜ் வெப்சீரிஸ் வெளியானது. ஒட்டுமொத்தமாக 3.30 மணி நேரம் கொண்ட இந்த கதை 6 எபிசோடுகளாக வெளியான நிலையில், ரசிகர்களை பெரிதாக கவர தவறியிருப்பதாக ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பலர் விமர்சித்து வருகின்றனர்.

அடிவாங்கும் ஆர்யா: சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ஆர்யா நடித்த அரண்மனை 3, கேப்டன், வசந்த முல்லை, காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் என வரிசையாக படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், ஓடிடியில் அவர் நடித்த தி வில்லேஜ் வெப்சீரிஸும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை என்றே தெரிகிறது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: பேய் படமா? வேற்று கிரகவாசி படமா? என்றே தெரியாத அளவுக்கு கேப்டன் படத்தை போலவே இந்த வெப்சீரிஸையும் எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் என்றும் ஹாலிவுட்டில் பார்த்த சா, ப்ரீட், பிரடேட்டர், நரபலி உள்ளிட்ட அத்தனை கதைகளையும் மிக்ஸியில் போட்டு அரைத்து அவரும் குழப்பி நம்மையும் குழப்பி உள்ளார் என்றும் வெப்சீரிஸ் ரசிக்கும் படியாக இல்லை என்றும் விமானத்தில் ஏற்ற சீட் பெல்ட் எல்லாம் போட்டு கடைசியில் டேக் ஆஃப் செய்யாமல், அதே இடத்தில் இறக்கி விட்டதை போல சப்புன்னு இருப்பதாக விமர்சித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X