Blue Sattai Maran King of Kotha Review: கிங் ஆஃப் கொத்தாவை கொத்துக்கறி போட்ட ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: மலையாள சினிமாவில் எதார்த்த சம்பவங்களை அற்புதமாக படமாக எடுப்பார்கள். ஆனால், அவர்களுக்கு சுட்டுப் போட்டாலும் கேங்ஸ்டர் படம் எடுக்கவே வராது. அதை தெளிவாக துல்கர் சல்மான் நடித்துள்ள கிங் ஆஃப் கொத்தா படமும் எடுத்துக் காட்டியிருக்கிறது என ஆரம்பத்திலேயே கிங் ஆஃப் கொத்தாவை கொத்துக்கறி போட்டு விட்டார் ப்ளூ சட்டை மாறன்.
துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லக்ஷ்மி, டான்ஸிங் ரோஸ் சபீர், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி உள்ள கிங் ஆஃப் கொத்தா பெரும் பில்டப்புக்கு பிறகு வெளியான நிலையில், முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்களால் ஆட்டம் கண்டு விட்டது.

மொக்கை கேங்ஸ்டர்: படத்தில் வில்லன் அல்லது சூழ்நிலை ஸ்ட்ராங்காக இருந்தால் தான் அந்த படம் ஓடும். ஆனால், இங்கே இரண்டுமே ரொம்பவே வீக் என விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
பக்காவான கேங்ஸ்டர் படமாக கிங் ஆஃப் கொத்தா வரும் என நினைத்த நிலையில், மொக்கை கேங்ஸ்டர் படமாக வந்துள்ளதாக ப்ளூ சட்டை வெளுத்து வாங்கி உள்ளார்.
ரிஸ்க் எடுக்காதீங்க: போலீஸ் அதிகாரி பிரசன்னாவை கொத்தா எனும் இடத்துக்கு டிரான்ஸ்ஃபர் செய்ய அங்கே உள்ள லோக்கல் டானால் அவர் ரொம்பவே அவஸ்த்தைகளை சந்திக்கிறார். அவனை முடிச்சி விடணும்னு நினைக்கும் போலீஸ் அதிகாரி ஏற்கனவே அங்கே டானாக இருந்த ஹீரோவை மீண்டும் அங்கே கொண்டு வந்து மோத விடுவது தான் கதை என கிங் ஆஃப் கொத்தா கதைச்சுருக்கத்தை கூறியுள்ளார்.
ஏற்கனவே வில்லன் ஹீரோவிடம் மரண அடி வாங்கியவன் என்பதால், ஹீரோ உள்ளே வந்தாலே வில்லன் காலி என்கிற இடத்திலேயே படமும் காலி ஆகிவிடுகிறது. சரி படை பலம் வில்லனிடம் இருக்கு எதுவுமே இல்லாத ஹீரோ எப்படி சமாளிக்கப் போகிறான் என்கிற விறுவிறுப்பு கூட இல்லாமல், எத்தனை பேர் வந்தாலும், தானோஸ் போல அடித்து நொறுக்கிறார் துல்கர் சல்மான் என கிங் ஆஃப் கொத்தாவை வறுத்தெடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications











