Don't Miss!
- Travel
இந்தியாவிலேயே மிக பழமையான நகரம் நம் பூம்புகார் தானாம் – ஆராய்ச்சி கூறுகிறது!
- News
சூப்பர்..! இந்த மாவட்டங்களில் நல்ல மழை இருக்கு.. தலைநகர் சென்னையில் கிளைமேட் எப்படி- வானிலை மையம்
- Technology
மொபைல் சார்ஜிங் நிக்கவே இல்லையா? இதை மட்டும் செய்தால் எப்பவும் Battery Full தான்!
- Sports
அவங்களாம் சுயநலவாதிகள்.. அயல்நாட்டு வீரர்கள் சதி செய்கிறார்களா??.. சுனில் கவாஸ்கர் பரபரப்பு புகார்!
- Finance
வேண்டாம் என அனுப்பிய USA நிறுவனங்கள்.. அமெரிக்காவில் தான் இருப்போம்.. அடம்பிடிக்கும் ஊழியர்கள்!
- Lifestyle
இந்த 3 ஹார்மோன்கள்தான் பெண்களுக்கு பாலியல் ஆசை குறைய காரணமாம்... உடனே இத சரி பண்ணுங்க...!
- Automobiles
கார்களையே தூக்கி சாப்பிடும் வசதி! புதிய ஹோண்டா ஆக்டிவா விலை இவ்ளோதானா! இந்த மாதிரி ஒரு ஸ்கூட்டரை பாத்ததே இல்ல!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
பீஸ்ட்டே பரவாயில்லை.. இந்தி மெகா சீரியல்.. வாரிசு படத்தை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: வாரிசு படம் நேற்று இரவு பிரஸ் ஷோ போடாமல் இருந்திருந்தால் நாளை காலையில் தான் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் வந்திருக்கும். ஆனால், முதல் நாளே விஜய் ரசிகர்களை புலம்ப வைத்து விட்டாரே ப்ளூ சட்டை மாறன் என ட்ரோல்கள் பறக்கின்றன.
பீஸ்ட் படமே பரவாயில்லைப்பான்னு ப்ளூ சட்டை மாறன் சொல்லும் காட்சிகள் எல்லாம் வாரிசு படத்தை பார்த்து விட்டு அழாத விஜய் ரசிகர்கள் கூட கதறி அழுது விடுவார்கள் அந்த அளவுக்கு துவைத்து தொங்கப் போட்டுள்ளார்.
ப்ரீமியர் காட்சியை பார்த்து விட்டு படுத்துத் தூங்கி விட்டு பொறுமையாக வந்து சம்பவம் செய்திருக்கிறார்.
இனி 'தளபதி 67' தான்...வாரிசு படம் பார்த்து அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

ஒரு கோடி கொடுத்தும் இப்படியா
வாரிசு படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுக்கவும் அஜித்தின் துணிவு படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுக்கவும் ப்ளூ சட்டை மாறனுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக ரூமர்கள் கிளம்பின. அதற்கு பழிவாங்கவே மனுஷன் இந்த முறை மொத்த வன்மத்தையும் கக்கி உள்ளார் என விமர்சனத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஆட்டநாயகன் டக் அவுட்
சும்மாவே ஆடுவேன், நீங்க வேற காலில் சலங்கையை கட்டி ஆட்ட நாயகனையே அட்டாக் செய்துள்ளார். சென்டிமெண்ட் படம்னு சொன்னாங்க ஆனால், ஒரு இடத்தில் கூட எமோஷனலாக படம் கனெக்ட் ஆகவில்லை என்றும் முதல் பந்திலேயே ஆட்ட நாயகனை டக் அவுட் ஆக்கி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

பிரகாஷ் ராஜ் புத்தராகவே
இரண்டாம் பாதியிலாவது படம் சூடு பிடிக்கும் என்று பார்த்தால் அங்கேயும் படம் சூடு பிடிக்கவில்லை. சிஏ படித்தவர்களுக்கே புரியாத அளவுக்கு சேர்மேன், பிசினஸ் பற்றிய கிளாஸ் எடுத்து இருக்கிறார் வம்சி. வில்லன் பிரகாஷ் ராஜ் மொக்கை வில்லனாக மாறிவிட்டார். அதிலும், அந்த கிளைமேக்ஸ் காட்சியில் பிரகாஷ் ராஜிடம் பேசி விஜய் திருத்தும் காட்சிகளில் இனிமேல் வில்லனாகவே நடிக்க மாட்டேன் என்கிற அளவுக்கு புத்தராகவே மாறிவிட்டார் பிரகாஷ் ராஜ் என ப்ளூ சட்டை மாறன் பங்கம் பண்ணி உள்ளார்.

இந்தி சீரியல்
வாரிசு படத்தை சீரியல் என ட்ரெய்லரை பார்த்ததுமே ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். டேக்கன் படத்தின் சில சீன்களையும் சுட்டு வைத்துள்ளனர். சீரியலிலும் சீரியல் இது இந்தி சீரியல் என கழுவி ஊற்றி உள்ளார். வீட்டின் காட்சிகளுக்கு கூட VFX போட்டு சொதப்பி உள்ளனர். எம்ஜிஆரின் மாட்டுக்கார வேலன் படத்திலேயே தொழில்நுட்பத்தை அழகாக கையாண்டு இருப்பார்கள் என ப்ளூ சட்டை மாறன் எம்ஜிஆரை வைத்தே விஜய் படத்துக்கு பஞ்ச் கொடுத்துள்ளார்.

பீஸ்ட் பரவாயில்லை
பீஸ்ட் படத்திலாவது சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பாடல்களும் விஜய்யின் நடனமும் இருந்தது. ஆனால், இந்த படத்தில் அதுவும் இல்லை. நாயகி ராஷ்மிகா மந்தனா எதுக்கு இந்த படத்தில் இருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு வழக்கம் போல டெம்பிளேட் ஹீரோயினாகவே மாறிவிட்டார் என சந்தோஷத்தில் இருந்த விஜய் ரசிகர்களை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

துணிவு நிலைமை
வாரிசு படத்திற்கு முழுக்க முழுக்க நெகட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ள ப்ளூ சட்டை மாறனை கெட்ட வார்த்தையில் கமெண்ட் பக்கத்தில் விஜய் ரசிகர்கள் திட்டி வருகின்றனர். அதை விட முக்கியமாக அடுத்து துணிவு படத்தோட விமர்சனத்தை நினைச்சாதா பாவம் ஏகே என கமெண்ட் போட்டு ரணகளத்திலும் குதூகலம் அடைந்து வருகின்றனர். ப்ளூ சட்டை மாறன் கமர்ஷியல் படங்கள் என்றாலே இப்படித்தான் சொல்வார், அதையெல்லாம் கண்டுக்காதீங்க போய் படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க என்றும் கமெண்ட்டுகள் குவிந்துள்ளன.