Blue Sattai Maran: வாழை படத்துல இதுதான் ரொம்ப உறுத்துது.. ப்ளூ சட்டை மாறன் கொடுத்த விமர்சனம்!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படம் ஆகஸ்ட் 22ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில், அதன் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்ட நிலையில், பல விமர்சகர்களும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். வாழை படத்தை பார்த்து விட்டு ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள விமர்சனம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
வழக்கமாக படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து படங்களை தோல்வியடைய செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன் என்கிற குற்றச்சாட்டை சில பிரபலங்கள் வைத்து அவருடன் சண்டை எல்லாம் போட்டு வருகின்றனர்.

பார்த்திபன், விஜய் ஆண்டனி, ஆர்ஜே பாலாஜி என ஏகப்பட்ட பேர் ப்ளூ சட்டை மாறனை எதிர்த்துள்ளனர். அந்தகன் படம் சூப்பரா இருக்கு என ப்ளூ சட்டை மாறனே சொல்லி விட்டார் என பிரசாந்த் பேசிய நிலையில், சினிமா பிரபலங்கள் சிலர் ப்ளூ சட்டை மாறனின் பாசிட்டிவ் விமர்சனத்தை புரமோஷனாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
வாழை விமர்சனம்: இந்நிலையில், வாழை படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த விமர்சனம் டிரெண்டாகி வருகிறது. இந்தப் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தையே ப்ளூ சட்டை மாறன் கொடுத்திருக்கிறார் என்பது தான் இதில், ஹைலைட்டான விஷயமே. வாழை படம் மாரி செல்வராஜின் இளம் வயது வாழ்க்கை வரலாறு என அவரே சொல்லி விட்டார். இந்த படத்தில் இளம் வயது நாயகனாக வரும் சிறுவனும் அவனது நண்பரும் சிறப்பாக நடித்துள்ளனர். ரஜினிகாந்த் ரசிகராக ஹீரோவும் கமல் ரசிகராக அவரது நண்பரும் செய்யும் சேட்டைகள் எல்லாம் சிரிக்க வைக்கின்றன. இறுதிக் காட்சி கண்கலங்க வைத்து விடுகிறது. மாரி செல்வராஜ் தரமான படத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார் என்றார்.

உறுத்தும் விஷயம்: இந்த படத்தில் குறை என்று சொல்ல வேண்டுமென்றால், பள்ளியில் டீச்சரை கதையின் நாயகனாக சிறுவன் விரும்புவதாக காட்டப்படும் காட்சிகள் தான் உறுத்தும் விஷயமாக உள்ளது. அதையும் மோசமாக காட்டவில்லை என்பது ஆறுதலை தந்தாலும் அந்த காட்சிகளை இன்னும் கொஞ்சம் மாற்றியிருக்கலாம் என்றார். அதிகப்படியாக வாழை படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் வாழ்த்து மழை பொழிந்த நிலையில், டிரெண்டாகி வரும் #MariSelvaraj ஹாஷ்டேக்கில் வாழை படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த விமர்சனத்தையும் ஷேர் செய்து புரமோட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











