Blue Sattai Maran Andhagan Review: அந்தகன் படம் ப்ளூ சட்டை மாறனிடம் சிக்கியதா? தப்பித்ததா?
சென்னை: அந்தகன் படத்தை விட்டு விட்டு அந்தாதூன் படத்தையே போட்டு பொளக்க ஆரம்பித்து விட்டார் ப்ளூ சட்டை மாறன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் பாலிவுட்டில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் அந்தாதூன். அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் லீடு ரோலில் நடித்திருப்பார்கள்.
வெறும் 32 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட அந்த படம் 456 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து மிரட்டியது. அப்படியொரு படத்தை ரீமேக் செய்து பிரசாந்துக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் தியாகராஜன்.

நேற்று வெளியான பிரசாந்தின் அந்தகன் படம் சில பல குறைகள் இருந்தாலும், படத்தை பார்க்கும் போது ஆடியன்ஸை போர் அடிக்க விடாமல் என்டர்டெயின் பண்ணி விட்டது என்றும் பிரசாந்த் கம்பேக் என்றும் பல விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் கூறிய நிலையில், ப்ளூ சட்டை மாறன் அந்த படத்துக்கு கொடுத்துள்ள விமர்சனம் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
அந்தகன் அதிரடி: அந்தகன் படத்தை எடிட் செய்தவரை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். ஆரம்பத்தில் அந்தாதூன் படத்திலேயே தேவையற்ற சில காட்சிகள் இருக்கும். அதெல்லாம் தமிழில் வைத்திருந்தால் லேக் அடித்திருக்கும் என்பதால், ஜம்ப் கட் ரேஞ்சுக்கு எடிட் செய்து படத்தை முதல் பாதி முழுவதுமே விறுவிறுப்பாக கொண்டு சென்று 2ம் பாதியில் இந்தி படத்தில் என்ன இருந்ததோ அதை அப்படியே திரையில் காட்டி தப்பித்து விட்டனர். கொஞ்சம் ஸ்லோ பண்ணியிருந்தாலும் இந்த படத்திற்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருக்காது என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: பிரசாந்த் மற்றும் சிம்ரனின் நடிப்பு மற்றும் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றது படத்தை பார்க்கும் படி செய்ததாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார். பொதுவாகவே ரீமேக் படங்கள் என்றால் ஒரிஜினல் படத்தை எந்தளவுக்கு டேமேஜ் செய்ய முடியுமோ அந்தளவுக்கு டேமேஜ் செய்து விடுவார்கள். ஆனால், அந்தகன் படத்தில் தியாகராஜன் அந்த வேலையை அந்தளவுக்கு செய்யாமல் நேர்த்தியாகவே இயக்கி பார்க்கும் படி செய்து பாஸ் மார்க் வாங்கி விட்டார் என விமர்சித்துள்ளார்.
அந்தாதுனுக்கு அடி: அந்தாதுன் திரைப்படமும் முதல் பாதி ஹாலிவுட் படம் போல விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், 2ம் பாதியில் கிட்னி திருடுறேன் சட்னி திருடுறேன் என மொக்கை காமெடி பண்ணி வைத்திருப்பார்கள். அதையெல்லாம் தமிழில் கொஞ்சம் மாற்றியிருந்தால் நல்லா இருந்திருக்கும். ஆனால், அதை அப்படியே வைத்து விட்டனர். அந்தகன் படத்தில் பிரச்சனை இல்லை, அந்தாதூன் கதையிலேயே 2ம் பாதி பிரச்சனை தான் என அந்த படத்தை போட்டு பொளக்க ஆரம்பித்து விட்டார் ப்ளூ சட்டை மாறன்.
தாராளமா பார்க்கலாம்: இந்த படம் ஒரு சூப்பரான படமா என்றால் சூப்பருக்கும் சுமாருக்கும் இடைப்பட்ட படம் தான் என்றும் பிரசாந்துக்கு இது கம்பேக் தான். அடுத்தடுத்த படங்கள் இன்னமும் அவர் நல்லா பண்ணுவார் என்கிற நம்பிக்கை கொடுப்பதால் படத்தை தாராளமாக ஒருமுறை பார்க்கலாம் என ப்ளூ சட்டை மாறனே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











