Furiosa: எத்தனை கோடி இருந்தாலும் இப்படியொரு படத்தை எடுக்க முடியாது.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: ஜார்ஜ் மில்லர் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு மேட் மேக்ஸ் திரைப்படங்களும் உலக அளவில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும். நேற்று வெளியான ஃபியூரியோஸா திரைப்படமும் ரசிகர்களை எந்த வகையிலும் ஏமாற்றாமல் உச்சகட்ட சினிமா அனுபவத்தை கொடுத்துள்ளது என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.

பொதுவாகவே கமர்சியல் படங்களுக்கு ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுப்பது அரிதான ஒன்று. கிங்காங் உள்ளிட்ட இந்த ஆண்டு வெளியான பல ஹாலிவுட் படங்களுக்கு விமர்சனம் அளித்த ப்ளூ சட்டை மாறன் தமிழ் படங்களை எப்படி கழுவி ஊற்றினார் அதே அளவுக்குத்தான் ஆங்கில படங்களையும் கழுவி ஊற்றி இருந்தார்.

Blue Sattai Maran gives pull positive review to Furiosa Mad Max Saga

இந்நிலையில், ரசிகர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு ஃபியூரியோஸா திரைப்படத்திற்கு முழுவதுமாக பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்து ரசிகர்களை டிக்கெட் புக் செய்ய வைத்துள்ளார்.

ஹாலிவுட்டில் ஒரு உருப்படியான படம்: கடந்த சில ஆண்டுகளாகவே ஹாலிவுட் படங்களும் கோலிவுட் படங்கள் அளவுக்கு டல் அடித்து காணப்படுகின்றன. பல கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் படங்களைப் போலவே போர் அடிக்கும் படங்களைத்தான் ஹாலிவுட் டிலே இயக்குநர்கள் உருவாக்கி வந்தனர். ஓப்பன்ஹெய்மர் உள்ளிட்ட சில படங்களை தவிர்த்து பார்த்தால் ஏகப்பட்ட குப்பை படங்கள் தான் ஹாலிவுட்டிலும் வெளியாகி வந்தன. இந்நிலையில், இந்த ஆண்டு ஒரு தரமான படமாக ஜார்ஜ் மில்லர் இயக்கத்தில் ஃபியூரியோஸா திரைப்படம் வெளியாகியுள்ளது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்த வாரம் ராமநாதன் நடித்த சாமானியன் படத்துக்கு கூட விமர்சனம் கொடுக்காமல் நேரடியாக ஹாலிவுட் படமான ஃபியூரியோஸா படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் கொடுத்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். எத்தனை கோடி இருந்தாலும் இப்படி ஒரு டெக்னிக்கல் ஆன ரசிகர்களை கடைசிவரை கட்டிப் போடும் வகையிலான படத்தை கொடுக்க முடியுமா என்பது சவாலான விஷயம் தான் என படத்தை பாராட்டியுள்ளார்.

எல்லாமே எக்ஸ்ட்ராடினரி: மேட் மேக்ஸ் ஃபியூரி கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்தப் படத்தை விட டபுள் மடங்கு வெயிட்டான படமாக ஜார்ஜ் மில்லர் இந்த படத்தை கொடுத்திருக்கிறார். வறண்டு கிடக்கும் பாலைவனத்தை அவ்வளவு கலர்ஃபுல்லாக காட்டி இருப்பது, அழிந்துபோன உலகத்தில் வாழும் மனிதர்களின் நிலையை டீட்டெயில் செய்து காட்டியிருப்பது என படத்தின் இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் கடுமையான உழைப்பை போட்டிருப்பது தெரிகிறது. படம் முழுக்கவே ஆக்ஷன் காட்சிகள் தான் என்றும் இரண்டாம் பாதியில் அதுவே சில இடங்களில் லேசாக சலிப்பை தட்டினாலும் நிச்சயம் ஐமேக்ஸ் போன்ற பெரிய ஸ்க்ரீன்களில் இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X