தேரே இஷ்க் மே ஹைதர் அலி கால கதை.. தனுஷிடம் ரஜினி சாயல்.. சிதைத்த ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

சென்னை: தனுஷ் - ஆனந்த் எல்.ராய் கூட்டணியில் உருவாகியிருக்கும் தேரே இஷ்க் மே திரைப்படம் நேற்று வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் சுமாரான வரவேற்பையே கொடுத்திருக்கிறார்கள். முதல் நாளில் 16 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக Sacnilk இணையதளமும் தகவல் வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் பற்றிய தனது விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் தேரே இஷ்க் மே. ஏற்கனவே இக்கூட்டணி பெரிய வெற்றியை கொடுத்திருந்தது. எனவே அதேபோல் ஒரு வெற்றியை இப்படத்திலும் நிச்சயம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்பதாலும் கண்டிப்பாக பாலிவுட், கோலிவுட் என அத்தனை மொழிகளிலும் படம் பந்தயம் அடிக்கும் என்று நம்பினார்கள்.

சுமாரான வரவேற்பு: ராஞ்சனா மாதிரியே இதுவும் காதல் கதைதான். ஆனால் அந்த அளவுக்கு படம் வொர்த் இல்லை என்று முதல் நாளிலேயே ரசிகர்களிடமிருந்து கருத்துக்கள் வர தொடங்கிவிட்டன. எந்த லாஜிக்கும் இல்லை; முதல் பாதியில் சொதப்பினார்கள் சரி இரண்டாவது பாதியாவது தேற்றிவிடுவார்கள் என்று பார்த்தால் அதுவும் சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. கண்டிப்பாக இது தனுஷின் மைலேஜில் ஒரு பின்னடைவை கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

Blue Sattai Maran Harsh Review of Dhanush s Tere Ishk Mein Goes Viral
Photo Credit:

வசூலும் ஓகேதான்: வசூலை பொறுத்தவரை இந்தியா முழுவதும் 16.50 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக Sacnilk இணையதளம் தகவல் வெளியிட்டிருக்கிறது. ஆனால் இதைவிட அதிகம் வசூலை ரசிகர்களும் படக்குழுவும் எதிர்பார்த்திருப்பார்கள் என்பதுதான் உண்மை. இப்படி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் டல்லடித்திருப்பதால் தனுஷ் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் படம் பற்றிய விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், "இந்தப் படத்தை நான் லீனியரில் எடுத்திருக்கிறார்கள். எல்லா கதைகளயும் நான் லீனியரில் சொன்னால் விளங்குமா?.. பைசன் படத்தையும் அப்படித்தான் எடுத்து வைத்திருந்தார்கள். அதில் எப்படி க்ளைமேக்ஸை தூக்கி முதல் சீனாக வைத்தார்களோ; அதேதான் இதிலும்.

தனுஷிடம் ரஜினி சாயல்: தனுஷின் நடிப்பில் ரஜினியின் சாயல் அதிகம் அடிக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை. இது ஹைதர் அலி காலத்து கதை. தெளிவே இல்லாத திரைக்கதை. படம் டெக்னிக்கலாகவும், மேக்கிங் ரீதியாகவும் நன்றாகத்தான் இருக்கிறது. இந்த மாதிரி காதல் கதையில் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதற்கு 50 வருடங்களுக்கு முன்பு வந்த படங்களிலிருந்து சீன்களை தூக்கி வைத்திருக்கிறார்கள். நம் ஊரில் ட்ரோல் செய்த சீனை எல்லாம் இதில் வைத்திருக்கிறார்கள். படத்தில் மருந்துக்குகூட லாஜிக் இல்லை. ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷன் எல்லாம் நன்றாக இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள், பின்னணி இசை நன்றாக இருந்தது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X