கவினின் கிஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது?.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தில் அட்டாக் செஞ்சிட்டாரே
சென்னை: கோலிவுட்ல வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் கவின் நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சதீஷ் கிருஷ்ணன் இயக்கியிருந்த இப்படம் ஓரளவுக்கு எதிர்பார்ப்புடன் வெளியானது.இந்நிலையில் இப்படம் குறித்து பிரபல திரைவிமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் ஜொலிப்பவர்களில் கவினும் ஒருவர். விஜய் டிவியின் தயாரிப்பான இவர் பிக் பாஸில் கலந்துகொண்டதன் மூலம் வெகு பிரபலமடைந்தார். அதற்கு முன்னதாகவே சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாவது பாகம் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து தமிழ்நாடு முழுவதும் பிரபலமடைந்திருக்கிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோவான கவின்: இப்படிப்பட்ட நிலைமையில் பிக் பாஸ் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்த அடுத்தக்கட்ட பிரபல்யத்தை தனது திரை வாழகையில் பயன்படுத்த தொடங்கினார் கவின். அப்படி அவர் நடித்த டாடா திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஆனது. அந்தப் படத்தில் கவின் நடிப்பும் மிகச்சிறந்த பெயரை பெற்றது. முக்கியமாக கவினுக்கு திரைத்துறையில் நல்ல ஒரு எதிர்காலம் இருப்பதாகவும் திரைத்துறையினர் ஆருடம் கூறினர்.

சறுக்கிய கவின்: டாடா திரைப்படம் கொடுத்த வெற்றி கவினுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்தது. அந்த உற்சாகத்தோடு அடுத்ததாக ஸ்டார், ப்ளடி பெக்கர் ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். இரண்டு படங்களின் மீதும் அவரும் ரசிகர்களும் ஓரளவுக்கு எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். ஆனால் அவ்விரண்டு படங்களுமே தோல்வியைத்தான் சந்தித்தன. அதிலும் ஸ்டார் திரைப்படம் படுமோசமான விமர்சனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ப்ளடி பெக்கர் படத்தில் கெட்டப் எல்லாம் மாற்றி நடித்தார் இருப்பினும் அவருக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.
கவிஞன் கிஸ்: இப்படிப்பட்ட நிலைமையில் அவர் கிஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தை சதீஷ் கிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார். நேற்று இப்படமானது திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்ற இப்படம் குறித்து பிரபல திரைவிமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அவர் தனது விமர்சனத்தில், "இந்தப் படம் ஃபேண்டஸி ப்ளஸ் காதல் ஜானரில் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் முதல் பாதியில் தேவையில்லாத காட்சிகள் எல்லாம் இருக்கின்றன. இரண்டாம் பாதியும் அப்படித்தான். அதேசமயம் ஆர்ஜே விஜய் உள்ளிட்டோரின் சில காமெடிகள் மட்டும் படத்தில் ரசிக்கும்படி இருக்கின்றன. இந்த மாதிரியான படங்களுக்கு இசை பெரிய துணையாக இருக்க வேண்டும்.ஆனால் இதில் ஸ்பீடு பிரேக்கராகவே இருக்கின்றன. இவை எல்லாத்தையும் தாண்டி படத்தின் மேக்கிங் ரசிக்க வைக்கிறது. படத்தின் நீளமும் அதிகம். கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும். இப்படத்தின் கதைக்குள் தேவையில்லாத கதைகள் பல இருக்கின்றன" என்றார்.


Click it and Unblock the Notifications











