Blue Sattai Maran - பாஜக மீது பாசம் உள்ளவர் ஞானவேல் ராஜா.. அடுத்த பரபரப்பை பற்ற வைத்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பாஜக மீது பாசம் உள்ளவர் என ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டிருக்கிறார்.

பருத்திவீரன் படம் தொடர்பான விவகாரம் 17 வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது. அதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் சூழலில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அமீர் மேல் பல குற்றச்சாட்டுக்களை வைத்து அவரை ஒரு திருடன் என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப் பேச்சு தமிழ் சினிமா படைப்பாளிகளில் பெரும்பாலானோரிடத்தில் கடும் கண்டனத்தை பெற்றது.

Blue Sattai Maran has mentioned that producer Gnanavel Raja is fond of BJP

அமீர் பதிலடி: ஞானவேல் ராஜாவின் அந்தப் பேச்சுக்கு அமீரும் தக்க பதிலடி கொடுத்தார். அவரைத் தொடர்ந்து சசிகுமார், சமுத்திரகனி, பொன்வண்ணன், சினேகன், கரு.பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்டோரும் ஞானவேல் ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமீர் மிகச்சிறந்த படைப்பாளி. அவரை இப்படி அவமானப்படுத்துவதா என்ற கேள்வியையும் முன்வைத்தனர்.

ஞானவேல் ராஜாவின் வருத்தம்: நிலைமை கை மீறி செல்வதை உணர்ந்துகொண்ட ஞானவேல் ராஜா இன்று வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "பருத்திவீரன் பிரச்னை கடந்த 17 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. நான் இதுநாள்வரை அதை பற்றி பேசியதில்லை. என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் குறிப்பிடுவேன். அவரது குடும்பத்தினரிடமும் நெருங்கி பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுக்கள் என்னை காயப்படுத்தியுள்ளது.

அனைவரையும் மதிப்பவன்: அதற்கு பதிலளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் நான் அதற்கு மனபூர்வமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். எனனி வாழ வைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் நான் மதிப்பவன்" என குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது போலியான வருத்தம் என கூறி சசிகுமார் அதற்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

மோடி ஆதரவாளர்?: இந்நிலையில் ஞானவேல் ராஜாவை சுற்றி அடுத்த சர்ச்சை எழுந்திருக்கிறது. அதாவது அவர் ஒரு மேடையில் பிரதமர் மோடி பற்றியும், ஹிந்தி மொழி பற்றியும் பேசும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதனை மேற்கோள்காட்டி திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடி மற்றும் இந்திக்கு ஆதரவாக ஞானவேல் பேசிய பரபரப்பான வீடியோ: மோடி அவர்கள் நல்ல திட்டங்களால் பலர் பயன் பெறுகிறார்கள்.

இந்தியை தமிழ்நாட்டில் யாரும் திணிக்கவில்லை. மோடி சாரை பார்த்து இங்குள்ள அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். மோடி அவர்களின் பேச்சுகள் அனைத்தையும் தமிழில் டப்பிங் செய்ய ஆசைப்படுகிறேன். மோடி அவர்களின் பேச்சுக்கு நான் ரசிகன். அவற்றை ரசித்து கேட்பேன். என் மனைவிக்கு இந்தி தெரியும். நானும் இந்தி கத்துக்கனும்" என ஞானவேல் ராஜா பேசியவற்றை பகிர்ந்திருக்கிறார்.

அதேபோல் மற்றொரு ட்வீட்டில் ஞானவேல் சாரி இந்தி மற்றும் பாஜக பாசம் என குறிப்பிட்டு கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் பிறந்தநாள் விழா குறும்பட போட்டி மேடையில் ஞானவேல் பாஜக மற்றும் ஹிந்திக்கு ஆதரவாக பேசியதையும் பகிர்ந்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X