கையாலாகாத செயல்.. பழியை தூக்கி விதி மேல போடாதே.. பாக்யராஜ் மகனை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: பாக்யராஜின் மகனான சாந்தனு பாக்யராஜ் அண்மையில் கொடுத்த பேட்டியில், நான் சினிமாவிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் எவ்வளவு நல்ல படம் பண்ணாலும் அது ஜெயித்தது என்று சொல்லவே மாட்டாங்க. சாந்தனு என்ன பண்ணி இருக்கான் என்று பார்க்காமல், பாக்யராஜ் மகன் பார்க்கிறார்கள். நான் பாக்யராஜூக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று கேட்கவே இல்லை. அது தான் விதி. என்னை பார்க்கும் பலர், உங்க கிட்டஇல்லாத பணமா என்று கேட்பார்கள். நானும் சராசரி மனுஷன் தான். அடுத்த ஜென்மத்திலாவது, சிவகார்த்திகேயன், மணிகண்டனாக பிறக்க வேண்டும் என்று பேசி இருந்தார்.
சாந்தானு பேசியது குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார். உங்களை போன்ற சினிமா வாரிசுகளின் திரைப்படங்கள் தோற்க முக்கிய காரணம் தவறான கதை மற்றும் இயக்குனர் தேர்வுகள். அதை உணர்ந்து.. சரிசெய்து வெற்றி பெற வேண்டும். அதை விட்டுவிட்டு பழியை தூக்கி தந்தைகள் மீது போடுவது கையாலாத செயலின் வெளிப்பாடு. சில தினங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் மகளாக இருப்பதால் மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அது பெரிய அழுத்தமாக உள்ளதென சௌந்தர்யா உருட்டினார். கோச்சடையான் அவர் இயக்கிய படம்தான். கோவா படத்தை தயாரித்தார். இரண்டும் ஓடாததற்கு காரணம் யார்?
ப்ளூ சட்டைமாறன்: சிவகார்த்திகேயனாக பிறந்தால் ஜெயித்து விட முடியாது. அவர் விஜய் டிவியில் அது இது எது எனும் நிகழ்ச்சியில் சிறந்த நகைச்சுவை தொகுப்பாளராக இருந்து மக்களின் ஆதரவை பெற்றார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில்ா அருமையான மிமிக்ரிகள் செய்து பட்டம் வென்றார். அதன்பிறகு சினிமா நிகழ்ச்சி மேடைகளில் தொகுப்பாளராக இருந்தார். சில படங்களில் காமடியனாக நடித்தார். கேடி பில்லா கில்லாடி ரங்கா எனும் டபுள் ஹீரோ படத்தில் நடித்தார். அதன் பிறகுதான் ஹீரோ ஆனார்.

தனித்திறமையல்ல: இதில் சில முக்கிய ஒற்றுமைகள் மணிகண்டனுக்கும் உண்டு. அவர் சிறந்த சினிமா எழுத்தாளரும் கூட. ஆனால், நீங்கள் எடுத்த எடுப்பிலேயே ஹீரோவாகி விட்டீர்கள். அதை பயன்படுத்தி முன்னுக்கு வராதது யார் தவறு? இத்தனை வருடங்களில்.. உங்களை போன்ற வாரிசுகள் வளர்த்துக்கொண்ட தனித்திறமைகள் என்ன? அது மக்களிடம் எந்தளவிற்கு சென்று சேர்ந்தது? ஜிம்முக்கு செல்வது, குதிரை ஓட்டுவது, சிலம்பம் சுற்றுவது என முறுக்கு சுற்ற வேண்டும். உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டியது ஹீரோக்களின் கடமை. தனித்திறமையல்ல.
பழியை தூக்கி விதி மேல் : Rugged look ஐ காட்ட தாடி வளர்த்து பல ஆண்டுகளாக இருப்பது மட்டுமே மக்கள் உங்களிடம் கண்ட மாற்றம். கார்த்திக், பிரபு, விக்ரம் பிரபு, சூர்யா, கார்த்தி, அருண் விஜய் என ஜெயிப்பவர்களும் இங்குதான் இருக்கிறார்கள். சுப்ரமணியபுரம், காதல், களவாணி, பாய்ஸ், டாணாக்காரன், மகாராஜா போன்ற பல படங்களை தவற விட்டது நீங்கள்தானே? இதில் ஷங்கர் தவிர்த்து அனைவருமே புது இயக்குனர்கள். அவர்களை நீங்கள் நம்பவில்லை. அவர்களை நம்பிய பரத், விமல், விக்ரம் பிரபு, விஜய சேதுபதி ஆகியோர் நீங்கள் தவற விட்ட படங்களில் நடித்து வெற்றி பெற்றனர்.ஆகவே தோல்விக்கான பழியை தூக்கி விதி மேல் போடாமல்.. மதியை பயன்படுத்தி ஒரு ஹிட்டாவது தரும் வேலையை சரியான முறையில் செயல்படுத்துங்கள் என சாந்தனுவை வம்புக்கு இழுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











