ரஜினியுடனான சீக்ரெட் சந்திப்பில் கசப்பான சம்பவங்கள்.. வீடியோ வெளியிடும் ப்ளூ சட்டை மாறன்

சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) ரஜினிகாந்த் இமயமலை கிளம்புவதற்கு ஒரு நாள் முன்பு அவரை சந்தித்ததாகவும் அப்போது சில கசப்பான சம்பவங்கள் நடந்ததாகவும் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார்.

திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சமீபகாலமாக ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். ரஜினிகாந்த்தை மட்டுமின்றி அவரது ரசிகர்கள், ஆதரவாளர்கள் என ஒருவரையும் விடாமல் சகட்டுமேனிக்கு விளாசுகிறார். இதனால் அவர் மீது ரஜினி ரசிகர்கள் கடுமையான கோபத்தில் இருக்கின்றனர். அவரை தாக்க வேண்டும் என ரசிகர்கள் பேசிய ஆடியோவையும் ஜெயிலர் ரிலீஸுக்கு முன்னர் ரிலீஸ் செய்து மாறன் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Blue Sattai Maran has revealed that he met Rajinikanth a day before left for the Himalayas

நெகட்டிவ் விமர்சனம்: ஜெயிலர் படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி பெரும்பாலும் பாஸிட்டிவ் விமர்சனத்தையே பெற்றுவருகிறது. ஆனால் ப்ளூ சட்டை மாறனோ படத்தை கழுவி கழுவி ஊற்றினார். அதுமட்டுமின்றி படம் வசூலித்ததாக வெளியாகும் ரிப்போர்ட்டுகள் எல்லாம் டுபாக்கூர் ரிப்போர்ட்டுகள் என்றும்; ரஜினி ரசிகர்கள் வடை சுடுகிறார்கள் என்றும் அதிரடியாக ட்வீட் செய்துவருகிறார்.

புதிய ட்வீட்: இந்நிலையில் ரஜினிகாந்த் இமயமலை கிளம்புவதற்கு ஒருநாள் முன்பு அவரை சந்தித்ததாகவும் அப்போது விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்ததாகவும் அதுதொடர்பான வீடியோவை 11 மணிக்கு வெளியிடுவேன் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "தலைவர் (ரஜினிகாந்த்) இமயமலைக்கு புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, காலையில் அவரது விசுவாசமான நண்பரும் பழங்கால பத்திரிகையாளருமான செய்யாறு வேலுவிடம் (செய்யாறு பாலு) இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

உரையாடல் இதோ: 'வணக்கம் மிஸ்டர் மாறன். நாங்கள் இன்று இரவு ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தலைவருடன் சிறப்பு சந்திப்பு நடத்துகிறோம். சமூக ஊடகங்களில் உங்களின் விமர்சனங்களை பார்த்த அவர் மிகவும் வருத்தமடைந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறார். அதனால், இன்று நடைபெறும் மீட்டிங்கில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும். லொகேஷனையும் பிற விவரங்களையும் இப்போது அனுப்புகிறேன். நீங்கள் கலந்துகொள்ளுங்கள் என வேலு கூறினார்.

வர முடியாது: நான்... 'மன்னிக்கவும். என்னால வர முடியாது சார். இந்த நேரத்தில் அவரை சந்திப்பது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். என் நிலைமையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்'. என்றேன். அதற்கு வேலுவோ, 'மாறன்..கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்களை மறந்துவிடுங்கள். தலைவர் மிகவும் கனிவான உள்ளம் கொண்டவர். உங்களிடம் கோபமெல்லாம் படமாட்டார். அவர் எப்போதும் சமாதானத்தை விரும்புபவர் . மீட்டிங்கில் கலந்துகொண்டு எங்களுடன் சில நிமிடங்கள் செலவிடுங்கள். நீங்கள் சங்கடமாக உணர்ந்தால், எந்த நேரத்திலும் மீட்டிங்கிலிருந்து வெளியேறலாம் என சொன்னார்.

சம்மதம் ஆனால் ஒரு கண்டிஷன்: உடனே நான், 'சரி. என்னால் எப்போதும் பிடிவாதமாக இருக்க முடியாது. மூத்த கலைஞர் அழைக்கும்போது அதனை ஏற்று அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று புரிந்துகொள்கிறேன். மீட்டிங்கிற்கு வருகிறேன். ஆனால் ஒரு கண்டிஷன் இருக்கு சார் என்றேன். அதற்கு அவர் என்ன கண்டிஷன் என கேட்க, இந்த மீட்டிங்கின் முக்கியமான தருணங்களை நான் எனது மொபைலில் பதிவு செய்கிறேன். அது செய்யாவிட்டால் ரஜினியிடம் மன்னிப்பு கேட்கத்தான் நான் வந்தேன் என பொய்யான செய்திகள் பரவும் என்றேன்.

அதற்கு அவரோ, 'மன்னிக்கவும். மொபைலை எடுத்துச் செல்லும் நபர்களை அவர் சந்திக்க மாட்டார். குறிப்பாக இது போன்ற தனிப்பட்ட சந்திப்பின்போது என்று சொல்ல நானோ அப்படியானால் என்னால் வர முடியாது. மன்னிக்கவும் என முற்றுப்புள்ளி வைத்தேன். விடாத அவர், சரி. இதைப் பற்றி நான் அவருடைய மேலாளரிடம் பேசிவிட்டு லைனில் வருகிறேன் என சொல்லிவிட்டார்.

2 மணி நேரம் கழித்து: இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் அழைத்த அவர் வணக்கம் மாறன். தலைவர் உங்கள் நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டார். உங்கள் மொபைலை எடுத்துச் சென்று சில தருணங்களைப் பதிவு செய்யலாம். ஆனால் தயவு செய்து எதையும் பதிவு செய்யாதீர்கள். எடுக்கப்படும் வீடியோ பொதுவெளியில் பகிரப்படாது என்று நீங்கள் எழுதி கையெழுத்திட வேண்டும் என்றார். நான் உடனே ஆம் எனக்கு புரிகிறது. இன்று சந்திப்போம் என சொல்லி வைத்துவிட்டேன்.

விரும்பத்தகாத நிகழ்வுகள்: ஆனால் எதிர்பார்த்தது போலவே இந்த சந்திப்பின்போது சில கசப்பான சம்பவங்கள் நடந்தன. எனவே அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நான் மீற வேண்டும். இன்று காலை 11 மணியளவில் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ காட்சிகள் பகிரப்படும். விளைவுகளை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். நேர்மையான மற்றும் பாரபட்சமற்ற நபர்களை நான் எப்போதும் நம்புகிறேன். தயவு செய்து காணொளியை பார்த்து நேரடியாக கருத்து தெரிவிக்கவும்" என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவர் பகிரப்போகும் வீடியோவில் எந்த மாதிரியான காட்சிகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நெட்டிசன்களிம் எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X