Blue sattai Maran: நீங்க சொன்னது பச்சை பொய்.. பார்த்திபனை விடாது துரத்தும் ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: இயக்குநர் பார்த்திபனுக்கும் ப்ளூ சட்டை மாறனுக்கும் இரவின் நிழல் படம் வெளியான போதே பஞ்சாயத்து ஏற்பட்ட நிலையில், தற்போது ப்ளூ சட்டை மாறன் மீண்டும் பார்த்திபனை வம்பு இழுத்துள்ளார்.

பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ஏஆர் ரஹ்மான் இசையமைத்த இரவின் நிழல், உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாகும்.

blue sattai maran has trolled parthiban about iravin nizhal 120 international award

ஆனால், இந்தப் படம் முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் இல்லை என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து இருந்தார். இதுதொடர்பாக பார்த்திபனும் ப்ளூ சட்டை மாறனும் டிவிட்டரில் கடுமையாக மோதிக் கொண்டனர்.

ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது: இவர்களின் பஞ்சாயத்து சற்று ஓய்ந்து இருந்த நிலையில்,நேற்று முன்தினம், இரவின் நிழல் படத்தில் வரும் மாயவா தூயவா என்ற பாடல் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், நிலவில் சந்திரயான் இறங்கும் போது விஞ்ஞானிகள் மட்டும் அல்ல, அந்த கட்டிடத்தில் பணிபுரியும் அனைவருமே, மகிழ்ந்திருப்பார்கள். பெருமை பட்டிருப்பார்கள்.

120 சர்வதேச விருதுகள்: ஏ.ஆர்.ரகுமானுடன் ஒரு படமாவது பண்ண வேண்டும் என்பது என்னுடைய நீண்ட காத்திருப்பு, அதன் பலனாக எனக்கு இரவின் நிழலில் கிடைத்த மரியாதை கிட்ட தட்ட 120 சர்வதேச விருதுகள் எல்லாமே கிடைத்தும் கூட, நம் தேசிய விருது என்கிற போது அதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.

விருதுகளை வழங்கியவர்கள் யார்?: இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், பார்த்திபனை வம்பு இழுக்கும் வகையில், பார்த்திபன் சார்.. நீங்கள் வாங்கிய 120 சர்வதோசை விருதுகள் எந்தெந்த தேதிகளில் வழங்கப்பட்டன? ஒவ்வொன்றிற்குமான அதிகாரப்பூர்வ வெப்சைட் பட்டியலை வெளியிடுவீர்களா? இந்த சர்வதேச விருதுகளை வழங்கியவர்கள் யார்? அவற்றின் அல்லது அவர்களின் பெயரென்ன?

சான்றிதழ்களை காட்டமுடியுமா: 120 விருது கமிட்டிகளின் தலைவர் அல்லது பொறுப்பாளர்கள் கையெழுத்திட்ட உண்மையான சான்றிதழ்களை ப்ரெஸ் மீட் வைத்து நிருபர்களுக்கு காட்ட முடியுமா? ஒவ்வொரு விருது அமைப்பும் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது? ஆம். நாங்கள்தான் விருது தந்தோம் என 120 விருது கமிட்டிகளின் தலைவர்கள் அல்லது பொறுப்பாளர்கள் .. வீடியோ மூலம் பேட்டி தந்து உங்கள் மீதான சந்தேகத்தை போக்குவார்களா?

blue sattai maran has trolled parthiban about iravin nizhal 120 international award

பச்சைப்பொய்: ஒவ்வொரு கேள்விக்கும் மனசாட்சியுடன் நேர்மையாக பதில் சொல்லுங்க சார். இல்லைன்னா நீங்க சொன்னது பச்சைப்பொய் என்று தான் அனைத்து தமிழர்களாலும் உணரப்படும்.இந்த ஆதாரங்களை திரட்டித்தர ஒருநாளே அதிகம். இதை உங்கள் உதவியாளர்கள் எளிதில் செய்து விடலாம். புதிய தகவலை தேட அவசியமே இல்லை.விருது வாங்கியதற்கான அங்கீகாரங்கள் உங்களுக்கு மெயில் மூலம் வந்திருக்கும். அவற்றை மீடியாவுக்கு forward செய்தாலே போதும் என பதிவிட்டுள்ளார். இதற்கு பார்த்திபன் என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதை பொருத்திருந்து பார்ககலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X