Blue Sattai Maran: ஜெயில்ல ஜெயிலர்தான் கிங்... இதெல்லாம் பஞ்ச் டயலாக்கா..? வச்சு செய்யும் ப்ளூ சட்டை

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் செகண்ட் சிங்கிள் டீசர் நேற்று வெளியானது.

ஜூலை 17ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் பாடல் ரஜினியின் இன்ட்ரோ சாங்காக உருவாகியுள்ளது.

அனிருத்தின் மிரட்டலான பிஜிஎம் உடன் வெளியான இந்த டீசரில் ரஜினியின் பஞ்ச் டயலாக் இடம்பெற்றுள்ளது.

இதனை ப்ளூ சட்டை மாறன் வடிவேலு மீம்ஸுடன் பங்கமாக கலாய்த்து ட்ரோல் செய்துள்ளார்.

 Blue Sattai Maran: Jailer Second Single Punch Dialogue Trolled by Blue Sattai Maran

ஜெயில்னா ஜெயிலர்தாங்க கிங்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில், ஜெயிலர் செகண்ட் சிங்கிள் வரும் 17ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன் டீசர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வருகிறது.

ரஜினியின் இன்ட்ரோ பாடலாக இது இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல், அனிருத்தின் பிஜிஎம் செகண்ட் சிங்கிளுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. முக்கியமாக இந்த டீசரில் இடம்பெற்றுள்ள ரஜினியின் பஞ்ச் டயலாக் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் மொமண்ட்டாக அமைந்துள்ளது. இந்த டீசர் ஜெயிலர் செகண்ட் சிங்கிள் மட்டுமில்லாமல், படம் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.

"ஹேய் இங்க நான் தான் கிங்... நான் வச்சது தான் ரூல்ஸ்... அந்த ரூல்ஸ்ஸ அப்பப்போ என் இஷ்டத்துக்கு மாத்திட்டே இருப்பேன்... அத கப்சிப்ன்னு ஃபாலோ பண்ணனும்... அத விட்டுட்டு எதாவது அடவாடித்தனம் பண்ண நினைச்ச... உன்ன கண்டம் துண்டமா வெட்டி கலைச்சு போட்டுடுவேன்... ஹ்ம்க்கும் டைகர் கா ஹ்ம்க்கும்" என ரஜினி பேசிய பஞ்ச் டயலாக் அவரது ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது.

 Blue Sattai Maran: Jailer Second Single Punch Dialogue Trolled by Blue Sattai Maran

அதேபோல், இந்த டீசரில் ரஜினியின் ஸ்டைலிஷான லுக்கும் மாஸ் காட்டுகிறது. இதனையடுத்து ஜெயிலர் செகண்ட் சிங்கிளை ரஜினியின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், ப்ளூ சட்டை மாறன் இதனையும் பங்கமாக கலாய்த்துள்ளார். வடிவேலுவின் மீம்ஸுடன் ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை, "இங்க நான்தான் கிங். நான் வச்சதுதான் ரூல்ஸ்... ஏங்க... ஹாஸ்பிடல்னா டீன், ஹாஸ்டல்னா வார்டன், ஜெயில்னா ஜெயிலர்தாங்க கிங். அவர் வக்கிறதுதான் சட்டம். இதப்போயி பஞ்ச் டயலாக்னு பெருமையா பேசிட்டு இருக்கீங்க..." என கலாய்த்துள்ளார்.

ஏற்கனவே ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாடலை விரட்டி விரட்டி கலாய்த்த ப்ளூ சட்டை, இப்போது செகண்ட் சிங்கிளில் இருந்தும் கண்டெண்ட் எடுத்து வந்து தெறிக்கவிட்டு வருகிறார். இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் ப்ளூ சட்டைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேநேரம் ரஜினியை கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறனை "நீ கலக்கு சித்தப்பு" என உசுப்பேத்தி விட்டும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X