Blue Sattai Maran Jigarthanda Double X Review: கெட்டுப்போன ஜிகர்தண்டா.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்!
சென்னை: இந்த தீபாவளிக்கு வெளியான ஜப்பான், ரெய்டு மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட மூன்று படங்களில் கொஞ்சம் ரசிகர்களை திருப்திப்படுத்தியும் அனுப்பும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் சோலியையும் தற்போது ப்ளூ சட்டை மாறன் மொத்தமாக கெட்டுப் போன ஜிகர்தண்டா என கீழே ஊற்றி விட்டார்.
ஒரு படத்தில் ஓராயிரம் கதையை வைத்து கார்த்திக் சுப்புராஜ் கடுப்பேற்றி உள்ளார் என்றும் எங்கோ ஆரம்பித்து படம் எங்கெங்கோ டிராவல் ஆகி கடைசியில் பூமர் அங்கிள் போல கார்த்திக் சுப்புராஜ் கருத்தெல்லாம் சொல்றாரு என கலாய்த்துள்ளார்.

தித்திக்காத தீபாவளி: தீபாவளி என்றாலே நடிகர் அஜித் அல்லது நடிகர் விஜய் படங்கள் ரிலீஸ் ஆனால் தான் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகம் பிறந்து அதிகமானோர் தியேட்டருக்கு சென்று தீபாவளியை கொண்டாடுவார்கள். ஆனால், இந்த தீபாவளிக்கு தியேட்டருக்கு சென்று ஜப்பானையும் ஜிகர்தண்டா 2வையும் பார்ப்பதற்கு பதில் வீட்டிலேயே பட்டாசு வெடிக்கலாம் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ப்ளூ சட்டை மாறன் ஜப்பானை தொடர்ந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தையும் வச்சு செய்து விட்டார்.
வாழை இலையில ஊத்தின ரசம்: கல்யாண பந்தியில கடைசியா வாழை இலையில ரசத்தை கொஞ்சம் அதிகமா ஊத்தினாலும் அது இலையில உள்ள எல்லா இடத்துக்கும் டிராவல் ஆகி கடைசியில் பேன்ட்டையே நனைத்து விடும். அதே போல ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் கதை எங்கேயோ ஆரம்பித்து எங்கெங்கோ செல்வதால் எங்கேயும் கனெக்ட் ஆக முடியவில்லை என ப்ளூ சட்டை மாறன் கழுவி ஊற்றியுள்ளார்.
கெட்டுப்போன ஜிகர்தண்டா: கருத்து சொல்றேன் என்கிற பெயரில் பூமர் அங்கிள் மாதிரி படத்தை கார்த்திக் சுப்புராஜ் எடுத்து வைத்திருக்கிறார் என்றும் நானெல்லாம் அடிக்கடி மதுரைக்கு போகிறவன். அங்கே ஜிகர்தண்டாவை ஆசையாக வாங்கிக் கொடுப்பேன். இனிமேல் ஜிகர்தண்டாவையே குடிக்க முடியாத அளவுக்கு பண்ணிட்டீங்களே டா என போட்டுத் தாக்கி உள்ளார்.
கருப்பு நடிகர் சினிமாவில் சாதிப்பது போல தொடங்கி, மலைவாழ் மக்களுக்கு உழைக்கிறேன் என சென்று சத்யஜித்ரே, ஜெயலலிதா, எம்ஜிஆர் கதையெல்லாம் உள்ளே எடுத்து வச்சிருக்காரு என ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் ரசிக்கும் விதமாக இல்லை என விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











