கெளதம் மேனன் உடம்புக்குள்ள புகுந்த மணி சார் ஆவி.. ஜோஷ்வா இமை போல் காக்க ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!

சென்னை: இயக்குநர் மணிரத்னம் படங்களையும் அவரையும் தொடர்ந்து ட்ரோல் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ஜோஷ்வா இமை போல் காக்க படத்தை விமர்சனம் செய்யும் போதும் மணிரத்னத்தை கலாய்த்து பேசியுள்ளார்.

கதை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் இருக்கலாம். ஆனால், எடுத்துக் கொண்ட கதைக்கு உண்மையாக இருந்தால் தான் அந்த படம் வெற்றிப் பெறும் என்றும் ஜோஷ்வாவில் அந்த உண்மையை கெளதம் மேனன் துளியும் காட்டவில்லை என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியிருக்கிறார்.

Blue Sattai Maran Joshua Imai Pol Kaakha Review trolls Maniratnam and Gautham Menon

ஜோஷ்வா படத்திற்கு பாசிட்டிவாகவும் சில விஷயங்களை ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ள நிலையில், அவரது விமர்சனத்தில் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார் என்பதை லேசாக இங்கே அலசுவோம்.

மணி சார் ஆவி: இயக்குநர் மணிரத்னத்தை இன்ஸ்பயராக கொண்டு தான் கெளதம் மேனனும் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். முதல் படமான மின்னலே முதல் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸிலும் மிகப்பெரிய ஹிட் அடித்து வருகின்றன. ஆனால், தனுஷை வைத்து கெளதம் மேனன் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா ஃபிளாப் ஆன நிலையில், அதை தொடர்ந்து பல படங்கள் அவர் இயக்கத்தில் பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. இந்நிலையில், மணி சார் ஆவி கெளதம் மேனன் உடம்புக்குள் புகுந்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் சொல்லியிருக்கிறார்.

படு கேவலம்: மணி சார் படங்களை இயக்கினாலே கேவலமாகத்தான் இருக்கும். இதில், மணி சார் ஆவி கெளதம் மேனன் உடம்புக்குள்ள புகுந்து இயக்கினால் அந்த படம் எப்படி இருக்கும் என சொல்லி விட்டு படு கேவலமாக ஜோஷ்வா இமை போல் காக்க படம் இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் அநியாயத்துக்கு நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.

ஒரே ஒரு பாசிட்டிவ்: படத்தின் கதை சரியல்ல, திரைக்கதை சரியில்லை, வில்லனாக வரும் கிருஷ்ணாவின் கேரக்டரே தேவையில்லை என டோட்டல் டேமேஜ் செய்த ப்ளூ சட்டை மாறன் கடைசியாக இந்த படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் ரசிக்கும் படியாக கெளதம் மேனன் உருவாக்கி இருக்கிறார் என்றும் பிக் பாஸ் வருண் ஜேம்ஸ் பாண்ட் போல சண்டை போடும் இடங்கள் எல்லாம் சிறப்பாக உள்ளது என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

ஒருதபா பார்க்கலாம்: கெளதம் மேனன் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்காமல் போகாது என்றும் ஒரு முறை பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் சொன்ன பாசிட்டிவ் விஷயத்தை வைத்து கமெண்ட் போட்டு வருகின்றனர். ஜோஷ்வா படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படம் தான். அதனால், காதல் காட்சிகல் பெரிதாக எடுபடவில்லை. அதுவும் சரியாக செட் ஆகியிருந்தால் நல்ல படமாகவே வந்திருக்கும் என்பது தான் அனைவரது கருத்தாக உள்ளது. துருவ நட்சத்திரம் படத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அந்த படத்தின் ரிலீஸை சீக்கிரம் செய்தால் நன்றாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X