வெள்ளிக்கிழமை ஹீரோ.. ஜி.வி. பிரகாஷை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.. கள்வன் விமர்சனம் இதோ!

சென்னை: இயக்குநர் பி.வி. சங்கர் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் ஏப்ரல் 4ம் தேதி வெளியான கள்வன் திரைப்படத்தின் விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளார். வழக்கம்போல இந்த வாரமும் தமிழ் சினிமாவை காப்பாற்ற எந்த ஒரு படமும் வரவில்லை என்பதுபோல விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.

ஜி.வி. பிரகாஷ் வெள்ளிக்கிழமை இதுவாகவே மாறிவிட்டார் என்றும் வார வாரம் ஓடுது ஓட வில்லையோ ஒரு புதிய படத்தை இறக்கிக் கொண்டே இருக்கிறார் ஜி.வி. பிரகாஷ் என பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Blue Sattai Maran Kalvan Review is here and he trolled GV Prakash as Friday hero

ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை சிறப்பாக்கிக் கொண்டே வருவதாக பலரும் விமர்சித்து வரும் நிலையில், கள்வன் படம் தோல்விப் படமாக மாற இதுதான் காரணம் என ப்ளூ சட்டை மாறன் விளக்கியுள்ள விமர்சனம் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

கள்வன்: ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, 'கலக்கப்போவது யாரு' தீனா மற்றும் இவானா நடிப்பில் நேற்று வெளியான கள்வன் திரைப்படம் சுமாராக உள்ளதாக பலரும் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இந்த வாரமும் ஜி.வி. பிரகாஷ் படம் வெளியாகி உள்ள நிலையில், அவரது நடிப்பு உள்பட அனைத்துமே சுமாராகத்தான் இந்த படத்திலும் இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான கள்வன் திரைப்படத்தை கொஞ்சம் சுதாரிப்பாக எடுத்திருந்தாலும் காப்பாற்றி இருக்கலாம். கள்வன் படத்தில் இரண்டு கதைகள் ஓடுகின்றன ஒன்று ஹீரோ ஹீரோயினை காதலிப்பது. இன்னொன்று அதற்காக வயதான பாரதிராஜாவை தத்தெடுத்து வளர்ப்பது. இந்த இரண்டு கதைகளையும் தனித்தனியாக எடுத்து இருந்தாலே படம் ஓடி இருக்கும். ஆனால், அதை விட்டுவிட்டு படம் முழுக்க யானை படம் போல ஆரம்பத்தில் புரமோஷன் செய்து ஏமாற்றிய இடத்தில் தான் படம் சறுக்கி விட்டது என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் வறுத்து எடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை ஹீரோ: கடந்த வெள்ளிக்கிழமை ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் ரெபல் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் ஓடவில்லை அடுத்து இந்த வாரம் கள்வன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதையும் யாராலும் காப்பாற்ற முடியாது. அடுத்த வாரம் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து டியர் படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார். அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை கிங்ஸ்டன் படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார். வெள்ளிக்கிழமை ஹீரோவாகவே ஜி.வி. பிரகாஷ் மாறிவிட்டார் என பயங்கரமாக ட்ரோல் செய்துள்ளார்.

நாட்டையே காப்பாத்த முடியாது: இதே போல படங்கள் வருவதால் தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியாது என கவலைப்பட வேண்டாம். தேர்தலுக்கு பிறகு அதே பழைய ரிசல்ட் வந்தால் இந்தியாவையே யாரும் காப்பாற முடியாது என மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை கள்வன் படத்தின் விமர்சனத்தில் கடைசி பஞ்சாக வைத்து முடித்து தனது விமர்சன வீடியோவை டிரெண்ட் ஆக்கியுள்ளார். கள்வன் படத்தின் விமர்சனத்தை விட கடைசி பஞ்ச் சூப்பர் என்று ரசிகர்கள் இந்த விமர்சன வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X