Blue Sattai Maran On Kanguva: சூர்யாவின் கங்குவா டாப் டூ பாட்டம்.. பொளந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: சூர்யா - தீஷா பதானி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக எடுக்கப்பட்டு, இன்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று காலை முதலே பல்வேறு பதிவுகளை கங்குவா படம் தொடர்பாக பகிர்ந்து வருகின்றார். அந்தவகையில் அவர் கங்குவா படத்தின் புரோமோசனின்போது படக்குழுவினர் என்னவெல்லாம் கூறினார்கள் என்பதை பட்டியலிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி டயாள், தீஷா பதானி, நட்டி, கருணாஸ், கலையரசி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். படம் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

படத்தினைப் பார்த்த பலரும் படத்திற்கு கலவையான விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர். பெரும்பாலான ரசிகர்கள் படத்தின் சி.ஜி காட்சிகள் சிறப்பாக இருப்பதாகவும், சூர்யா நடிப்பில் அசத்துவதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் படக்குழுவினர் கொடுத்த பில்டப் அளவிற்கு கங்குவா இல்லை எனக் கூறிவருகின்றனர். குறிப்பாக படத்தின் கதை பான் - இந்தியா கதை எனக் கூறும் அளவிற்கு இல்லை எனவும், படத்தின் இசை மிகவும் மோசமாகவும் இரைச்சலாகவும் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இப்படியான நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பெரிய பட்டிலைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பட்டியலில் படத்தின் புரோமோசனின்போது, படக்குழுவினர் தொடங்கி ரசிகர்கள் வரை என்னமாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி புரோமோசன் செய்தார்கள் என்பதை அடுக்கியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் படம் பார்த்த ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனின் பதிவுக்கு கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

கங்குவா லிஸ்ட்: அதாவது அந்தப் பதிவில், " 2,000 கோடி. தமிழின் முதல் பான் இண்டியா ஹிட் இதுதான - ஞானவேல், கட்டுப்படுத்த முடியாத காட்டாறு - சிறுத்தை, இந்தியாவே வாயை பிளந்து பார்க்கும் - சூர்யா, திரை தீப்பிடிக்கும் - வெற்றி, DOP, 100 தடவை பாத்துட்டேன் - மதன் கார்க்கி, சூர்யா அரசியலுக்கு வரனும் - போஸ் வெங்கட், உலகிலேயே சிறந்த நடிகர் சூர்யாதான் - கருணாஸ், 38 மொழிகள். 11,500 ஸ்க்ரீன்கள் - ஞானவேல், 2 hrs 10 mnts Goosebumps ஆக இருக்கும் - ஞானவேல், மரத்துல ஏற சொன்னா உடனே சூர்யா சார் சரசரன்னு ஏறிடுவார் - சிறுத்தை, இந்திய சினிமாவில் பார்க்காத பயங்கரமான சண்டை சீன் இதுல இருக்கு - சிறுத்தை, X லைக் பட்டனை கங்குவா ஐகான் போல மாற்றினார் எலன் மஸ்க் - சூர்யா ஃபேன்ஸ், பாகுபலி எடுக்க எனக்கு இன்ஸ்பிரேசனே சூர்யாதான் - ராஜமௌலி" என பட்டியலிட்டுள்ளார்.

படுதோல்வி: இவர் தனது முந்தைய பதிவில், "தேவையான அளவுக்கு மட்டும் ப்ரமோசன்பண்ணிட்டு அமைதியா இருந்தா சுமார் படம் நல்ல வசூலாகும். நல்ல படம் பெரிய ஹிட்டாகும். உதாரணம்: லப்பர் பந்து, அமரன்.ஓவர் பில்ட்ப் தந்த பல தமிழ்ப்படங்கள் படுதோல்வி அடைந்ததுதான் வரலாறு. உதாரணம்: இந்தியன் 2.கங்குவா நிலை என்னவாகும் என்பது இனிதான் தெரியும்.

ஹாலிவுட்: இனியாவது ஹாலிவுட் ரேஞ்ச் என்று சொல்வதை நிறுத்துங்கள். ஜூராசிக் பார்க், அவதார், டைட்டானிக், லார்ட் ஆப் தி ரிங்ஸ் போன்ற படங்களின் பொருட்செலவு, தொழில்நுட்ப நேர்த்தியை தொடுவது மிகக்கடினம். அதை நாம் தொடும்போது.. அவர்கள் மேலும் பலமடங்கு முன்னேறி இருப்பார்கள்.அட்லீஸ்ட்.. அந்த வாயை வச்சிட்டாவது சும்மா இருங்க. Waiting for .. 200, 500,1000,2000 கோடிகள் வடை" எனப் பதிவிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











