Blue sattai maran: பெஸ்ட் காமெடி படம் கொலை.. அடங்கவே மாட்டேன்கிறாரே ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் புதிதாக ரிலீசாகும் அனைத்து படங்களையும் விமர்சித்து வருகிறார்.

சினிமா விமர்சனங்கள் மட்டுமில்லாமல், சினிமா சார்ந்த பல விஷயங்களையும் இவர் விமர்சித்து வருகிறார். இதன்மூலம் பலரது கண்டனங்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்கள் குறித்த தன்னுடைய விமர்சனத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Blue sattai maran lists best comedy movies and adds Kolai, rudran movies

கொலை, ருத்ரன் படங்களை காமெடி படங்கள் பட்டியலில் சேர்த்த ப்ளூ சட்டை மாறன்: சினிமா விமர்சகர் மற்றும் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் புதிதாக ரிலீசாகும் படங்களின் விமர்சனங்களை உடனுக்குடன் கொடுத்து வருகிறார். பெரிய நடிகர்கள், சிறிய நடிகர்கள், பிரம்மாண்ட படங்கள், லோ பட்ஜெட் படங்கள் என பாரபட்சமின்றி இவரது விமர்சனங்களுக்கு அனைத்து படங்களும் சிக்கி வருகின்றன. இவர் ஒரு படத்தை பாராட்டுகிறார் என்றால் அந்தப் படம் ரசிகர்களின் மிகப்பெரிய பாராட்டிற்கு உள்ளான படம் என்று நாம் அர்த்தம் கொள்ளலாம்.

அந்த வகையில் சமீபத்தில் போர் தொழில் படத்திற்கு சிறப்பான விமர்சனங்களை கொடுத்திருந்தார் ப்ளூ சட்டை மாறன். இந்த பதிவிற்கு நடிகர் சரத்குமாரும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். ப்ளூ சட்டை மாறன் விமர்சனங்களில் உண்மை தன்மை உள்ளதா என்பது வேறு விஷயம். ஆனால் இவரது விமர்சனங்களால் இவர் அதிகமான விரோதிகளையும் நெகட்டிவ் விமர்சனங்களையும் சினிமாவில் சந்தித்து வருகிறார்.

ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் நிலையில், இவர்மட்டும் படத்தின் நிறைகளை ஹைலைட் செய்யாமல், குறைகளை அதிகமாக பேசி, ரசிகர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொள்வார். முன்னணி நடிகர்களின் ரசிகர்கள், படம் இயக்கினால்தான் அதன் அருமை தெரியும் என்று கமெண்ட் செய்த நிலையில், ஆன்டி இண்டியன் என்ற படத்தையும் ப்ளூ சட்டை மாறன் இயக்கியிருந்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தொடர்ந்து படங்கள் குறித்து பல விமர்சனங்களை செய்து வரும் ப்ளூ சட்டை மாறன், 2023ம் ஆண்டில் ஜூலை மாதம் வரையில் வெளியான படங்கள் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சனங்களை செய்துள்ளார். அதில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் குறைவான வசூலை ஈட்டியது குறித்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து மோசமான டைட்டிலுடன் வெளியான படம் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான பல்லு படாம பாத்துக்க என்ற படத்தின் டைட்டிலை அவர் மோசமான டைட்டிலாக விமர்சித்துள்ளார். இதனிடையே, பெஸ்ட் காமெடி படங்கள் என்று ராகவா லாரன்சின் ருத்ரன், ஆர்யா -முத்தையா கூட்டணியில் வெளியான காதர் பாட்ஷா, விஜய் ஆண்டனியின் கொலை, ஹரீஷ் கல்யாணினின் எல்ஜிஎம் படம் ஆகியவற்றை காமெடி படங்கள் என்று கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

இதனிடையே, இந்த ஆண்டில் இதுவரை வெளியான பெஸ்ட் படங்களின் பட்டியலையும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார். கவினின் டாடா, மணிகண்டனின் குட்நைட், சரத்குமார் -அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில், சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ், போன்ற படங்கள் இந்த ஆண்டில் இதுவரை வெளியான ரியல் ஹிட் படங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே விமர்சனரீதியாக சிறப்பாக அமைந்த படங்களாக, வினோத் கிஷனின் பிகினிங், சசிகுமாரின் அயோத்தி, வெற்றிமாறனின் விடுதலை 1, வடிவேலு -உதயநிதியின் மாமன்னன், பிரேம்ஜியின் சத்திய சோதனை போன்ற படங்களை அவர் லிஸ்ட் போட்டுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளை அவர் வெளியிட்டு வருகிறார். இந்த 2023ம் ஆண்டில் இதுவரை 7 மாதங்களை தமிழ் சினிமா கடந்துள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறனின் இந்த பட்டியல் கவனத்தை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X